விஸ்வரூபம் வில்லன் ட்வீட்டால் ஸ்டார் ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பிய வணிகவரித்துறை!

ஜி.எஸ்.டி வரி விதித்தது தொடர்பாக, சுங்க வரி விதிப்புத்துறை விளக்கம் கேட்டு ஜே.டபியுள்வூ மாரியாட் ஹோட்டலுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

news18
Updated: July 27, 2019, 3:50 PM IST
விஸ்வரூபம் வில்லன் ட்வீட்டால் ஸ்டார் ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பிய வணிகவரித்துறை!
ராகுல் போஸ் காண்பித்த பில்
news18
Updated: July 27, 2019, 3:50 PM IST
நடிகர் ராகுல் போஸ் வாங்கிய வாழைப் பழத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு வரி விதிப்புத்துறை ஜே.டபிள்யூ. மாரியாட் ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் போஸ், கடந்த இரண்டு தினங்களுக்கு சண்டிகரிலுள்ள ஜே.டபிள்யூ. மாரியாட் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். அதில் பேசிய அவர், ‘நான் தங்கியுள்ள ஜே.டபிள்யூ.மாரியாட் என்ற ஹோட்டலில் இரண்டு வாழைப் பழங்களுக்கு 442.50 ரூபாய் வசூலிக்கப்பட்டது’ என்று தெரிவித்திருந்தார்.Loading...

அவரது வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் ராகுல் போஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். தற்போது, அந்த ட்விட்டர் பதிவு அடுத்த கட்ட பிரச்னையை எட்டியுள்ளது. அவர், பதிவிட்டிருந்த ஹோட்டல் பில்லில், உணவு 375 ரூபாய் என்றும் ஜி.எஸ்.டி 67.50 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி விதித்தது தொடர்பாக, சுங்க வரி விதிப்புத்துறை விளக்கம் கேட்டு ஜே.டபியுள்வூ மாரியாட் ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சண்டிகர் மாநில செய்தித்தாளுக்கு பேட்டியளித்துள்ள அம்மாநில சுங்க வரித்துறை ஆணையாளர் ராஜீவ் சௌத்ரி, ‘பழங்கள் வரியில்லா வகையில் வருகின்றன. எனவே, வாழைப் பழத்துக்கு எதற்காக ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளார்கள் என்று விளக்கம் கேட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...