கர்நாடகா மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் உள்ள சகாப்புரா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுவர்ணா. 20 வயதான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஷப்பா என்ற இளைஞரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் சுவர்னாவின் வீட்டாருக்கு தெரிய வரவே பெற்றோர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்ணாவுக்கு 18 வயது நிரம்பிய நிலையில், அவரை வேறுவொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து சுவர்ணா கணவருடன் பெங்களூருவில் குடிபெயர்ந்துள்ளார். இருப்பினும் சுவர்ணவால் பழைய காதலை மறக்க முடியவில்லை.
திருமணத்திற்கு பின்பும் காதலன் ஈஷப்பாவுடன் சுவர்ணா தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு சுவர்ணா யாரிடமும் சொல்லாமல் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு யாதகிரிக்கு வந்து தனது காதலனை சந்தித்துள்ளார். ஒன்றாக வாழத்தான் முடியாது. சாவிலாவது ஒன்றிணைவோம் என விபரீத முடிவெடுத்துள்ளனர்.
அவர்களின் கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு அதிகாலை இருவரும் சென்று அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பின்னர், அப்பகுதிக்கு வந்த கிராம மக்கள் இருவரின் சடலத்தையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையின் சடலங்களை மீட்பு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.