Home /News /national /

காதல் திருமணம் செய்த இளைஞரின் ஆண்குறியை துண்டித்த பெண் வீட்டார்

காதல் திருமணம் செய்த இளைஞரின் ஆண்குறியை துண்டித்த பெண் வீட்டார்

தற்போது மணமகன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது மணமகன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது மணமகன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்மதம் இல்லாமல் திருமணம் முடித்ததால் ஆத்திரம் அடைந்த மணமகள்  குடும்பத்தினர், மணமகனின் ஆண் உறுப்பை துண்டித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. புதுடெல்லியின் சாகர்பூர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆணுறுப்பை இழந்த அந்த 22 வயது இளைஞரும், பெண்ணும் 3 ஆண்டுகளாக நெருங்கிப் பழகியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பதிவுத் திருமணம் நடந்திருக்கிறது. இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக, ரஜவ்ரி பூங்கா காவல் நிலையத்தில், திருமணம் தொடர்பான தகவல்களை அளிக்க தம்பதிகள் சென்றுள்ளனர். அவர்களுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த மணமகளின் உறவினர்கள், மணமகன் வெளியே வந்தபோது, அவரைத் தூக்கிச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

    இதையும் படிங்க : இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு
     மணப்பெண்ணின் தந்தை, சகோதரர், மாமா உள்ளிட்டோர் நடத்திய தாக்குதலில், மணமகனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உச்சகட்டமாக, மணமகனின் ஆணுறுப்பை மணமகளின் குடும்பத்தினர் துண்டித்தனர். தற்போது மணமகன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக ரஜவ்ரி பூங்கா போலீசார் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    இதையும் படிங்க : கேரள அரசியல் கொலைகள் : சோசியல் மீடியா அட்மின்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

     
    Published by:Musthak
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி