Home /News /national /

திருமண நிகழ்ச்சியில் கலவரம் - விருந்தினர்களுக்கு அடி உதை; துப்பாக்கிச்சூட்டில் பாஜக பிரமுகர் பலி

திருமண நிகழ்ச்சியில் கலவரம் - விருந்தினர்களுக்கு அடி உதை; துப்பாக்கிச்சூட்டில் பாஜக பிரமுகர் பலி

துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது..

துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது..

சாமியார் ராம்பால் போதித்த இந்து மதத்துக்கு முரணான சடங்கு நடைமுறைகளுடன் அந்த திருமணம் நடக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பஜ்ரங் தள அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்து மதத்துக்கு எதிராக திருமண சடங்குகள் செய்ததாக எழுந்த பிரச்னையால் பாஜக பிரமுகர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். திருமணத்துக்கு வருகை புரிந்த விருந்தினர்களையும் ஒரு கும்பல் அடித்து விரட்டியது.

    மத்திய பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள கடைக்கோடி கிராமமான பைன்சோடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த திருமண நிகழ்ச்சி களேபரமாக மாறியிருக்கிறது. இதில் ஏற்பட்ட ஒரு பிரச்னையால் திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் அடித்து விரட்டப்பட்ட நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கிராம தலைவராக இரண்டு முறை பதவிவகித்த பாஜகவைச் சேர்ந்த தேவிலால் தலைமையில் அன்றைய தினம் திருமண நிகழ்ச்சி நடக்க இருந்தது. தேவிலாலின் அழைப்பின் பேரில் பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவருமான சைலேந்திர ஓஜா தனது ஆதரவாளர்களுடன் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    திருமண வீட்டார் சர்ச்சைக்குரிய சாமியாரான ஹரியானாவைச் சேர்ந்த ராம்பாலின் ஆதரவாளர்கள் என்பதால் ராம்பாலின் போதனைகளை பின்பற்றி திருமண சடங்குகளை செய்து வந்தனர். ராம்பால் இந்து மத திருமண சடங்குகளுக்கு முரணான ஒரு திருமண சடங்கை பின்பற்ற தனது ஆதரவாளர்களை வலியுறுத்தியிருக்கிறார். சர்ச்சை சாமியாரான ராம்பால், தனது ஆசிரமத்தில் நடைபெற்ற கொலை குற்ற சம்பவங்களில் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருபவர்.

    Also read:  பாதாள அறையில் பெண்கள்.. கமலின் ‘பாபநாசம்’ பட பாணியில் போலீசுக்கே தண்ணி காட்டிய சம்பவம்

    ராம்பால் போதித்த இந்து மதத்துக்கு முரணான சடங்கு நடைமுறைகளுடன் அந்த திருமணம் நடக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பஜ்ரங் தள அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருமண நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் வைக்கப்பட்டிருந்த டிவிக்களில் ராம்பால் குறித்த வீடியோக்களும் ஒளிபரப்பட்டன. இதனை எதிர்த்த பஜ்ரங் தளம் அமைப்பினர், திருமணத்தை தலைமையேற்று நடத்திய தேவிலாலிடம் இந்து மதத்திற்கு எதிரான சடங்குகளை கிராமத்தில் அனுமதிக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களை பஜ்ரங்தள அமைப்பினர் இரும்பு கம்பிகளாலும், கட்டைகளாலும் அடித்துவிரட்டினர். இதனை தடுக்க முயன்ற தேவிலாலை பஜ்ரங்தளம் அமைப்பின் தலைவர் சைலேந்திர ஓஜா, கைத்துப்பாக்கியால் சுட்டதில் பாஜக பிரமுகர் தேவிலால் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    Also read:  தனக்கு வாக்களிக்காதவருக்கு எச்சிலை நக்க வைத்து கொடுமை - தேர்தலில் தோற்றவர் வெறிச்செயல்

    திருமண நிகழ்ச்சி கலவரமாக மாறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அதில் நால்வரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சியவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Gun shot, Marriage

    அடுத்த செய்தி