ஆதார் கார்டில் சாதி பெயர் இல்லை திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்

மாதிரிப் படம்

சாதியை மறைத்து திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர் என்று மணமகன் வீட்டார் குற்றம் சாட்டினர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திர மாநிலத்தில் மணமகளின் ஆதார் கார்டில் அவரது தந்தையின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் இல்லாததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் சிவன் கோயில் ஞாயிற்றுக் கிழமையன்று, வெங்கட் ரெட்டி என்பவருக்கும் சாரதா என்பவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. திருமண சடங்குகளுக்காக மணமக்களின் சான்றிதழ்கள் புரோகிதரின் முன்பு வைக்கப்பட்டன.

  அப்போது, ஆதார் கார்டில் மணமகளின் தந்தை பெயருக்கு பின்னே சாதிப் பெயரான ரெட்டி என்பது இல்லாமல், ஆஞ்சனேயலு என்று மட்டும் இருந்துள்ளது. அதனால், விவாதம் அதிகமாகியது. சாதியை மறைத்து திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர் என்று மணமகன் வீட்டார் குற்றம் சாட்டினர்.

  அந்தப் பெண்ணின் கிராமத்திலும் அவர்களது சாதி குறித்து விசாரித்துள்ளனர். அங்குள்ளவர்கள், அவர்கள் ரெட்டி சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட பிறகும், மணமகன் வீட்டார் நம்பவில்லை. திருமணத்தை நிறுத்திவிட்டனர். அதன்பிறகு, மணமகள் வீட்டார், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published: