முகப்பு /செய்தி /இந்தியா / 30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களுக்கு திருமணம்.. வைரலாகும் பாரம்பரிய திருமண விழா

30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களுக்கு திருமணம்.. வைரலாகும் பாரம்பரிய திருமண விழா

உயிரிழந்தவர்களுக்கு திருமண சடங்கு

உயிரிழந்தவர்களுக்கு திருமண சடங்கு

உயிரிழந்தவர்களின் ஆன்மாவை போற்றி சாந்தியடையச் செய்யும் விதமாக இந்த திருமண சடங்கை அவர்களுக்கு செய்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில் வினோதமான திருமண சடங்கு நடைபெற்றுள்ளது. 'பிரேதா கல்யாணம்' என்ற பெயரில் நடைபெற்ற இந்த திருமண சடங்கில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்த வினோத திருமண சடங்கானது கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது.

யூடியூபரான அன்னி அருண் என்பவர் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சடங்கானது 30 வருடங்களுக்கு முன்னர் இறந்தவர்களின் நினைவாக நடைபெற்றுள்ளது. மணமகனாக கருதப்படும் ஆணும், மணமகளாக கருதப்படும் பெண்ணும் குழந்தைகளாக மகப்பேறு போதே உயிரிழந்துவிட்டனர்.

இவர்களின் ஆன்மாவை போற்றி சாந்தியடையச் செய்யும் விதமாக இந்த திருமண சடங்கை அவர்களுக்கு செய்கிறார்கள். திருமணத்திற்கான சராசரியான வயது 30 என்பதால் இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு அந்த குடும்பத்தினர் திருமண விழாவை செய்து வைக்கின்றனர்.

புதிய திருமண ஆடைகளை வாங்கி வைத்து, இரு இருக்கைளை அருகருகே வைத்து அவற்றின் மீது திருமண ஆடைகளை வைத்துவிடுகின்றனர். அந்த இருக்கைகளில் மணமக்கள் இருப்பதாக கருதி இரு குடும்பத்தினரும் சடங்குகளை செய்து வருகின்றனர். விளக்கு ஏந்த சுற்றுவது, சப்தபதி போன்ற சடங்குகளை செய்தல் போன்ற அனைத்து திருமண சடங்கும் இவர்களுக்கு முறைப்படி செய்து வைக்கப்படுகிறது.

பின்னர் தாலி கட்டும் முகூர்த்த நேரத்தில் தான் மணமக்களின் பெயர் என்ன என கேட்கப்பட்டு, மணமகனுக்கு சந்தப்பா எனவும் மணப்பெண்ணுக்கு சோபா எனவும் பெயர் சூட்டப்படுகிறது. தாலி கட்டப்பட்டு, மணமக்களுக்கு அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வதித்து, பின்னர் ஆரத்தி எடுத்து வீட்டிற்கும் வரவேற்கின்றனர். இவ்வாறு திருமணத்தின் அனைத்து சடங்குகளையும் இரு குடும்பத்தாரும் முறைப்படி செய்து வைக்கின்றனர்.

இதையும் படிங்க: இயற்கைக்கு மாறான செக்ஸ், பெண்களை இழிவுப்படுத்துதல்... வெளிச்சத்திற்கு வந்த பிரபல மருத்துவக் கல்லூரியின் ராகிங் கொடுமை

மேலும், திருமண விருந்து உணவாக பிஷ் ப்ரை, சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி உள்ளிட்ட பல வகை பொருள்களை வைத்து அறுசுவை விருந்து படைத்து மகிழ்ச்சியுடன் சாப்பிடுகின்றனர். இந்த திருமண சடங்கில் திருமணமானவர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்ற தனித்துவமான விதி உள்ளது. குழந்தைகள் மற்றும் திருமணம் ஆகாத நபர்கள் யாரும் இந்த சடங்கில் பங்கேற்கவோ நேரில் பார்க்கவோ அனுமதி இல்லை.

பிறக்கும் போது உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து இவ்வாறு திருமணம் செய்து வைப்பது அவர்களின் ஆன்மாவை நீண்ட நாள்கள் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

First published:

Tags: Karnataka, Marriage