• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கணவனால் வன்புணர்வுக்கு ஆளான மனைவி: நீதியை நிலைநாட்டிய கேரள நீதிமன்றம்!

கணவனால் வன்புணர்வுக்கு ஆளான மனைவி: நீதியை நிலைநாட்டிய கேரள நீதிமன்றம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மனுதாரரின் தாயார் மறைந்த நாளில் கூட தனது மனைவியை கட்டாயப் படுத்தி உடலுறவு கொண்டார் என்றும்,  நோய்வாய்ப்பட்டு இருந்த நாட்களில்  உடலுறவு கொண்டார் என்றும்  மகளின் முன்னால் கூட தனது மனைவியுடன் வல்லுறவி ஈடுபட்டார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

  • Share this:
    திருமணத்திற்கு பின்பு கணவரால் மனைவி அனுபவிக்கும் பாலியல் வன்முறை  விவகாரத்து கோருவதற்கு போதுமான காரணமாக உள்ளது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

    கேரளாவைச் சேர்ந்த  நபர் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக தனது மனைவியை அவரது தந்தையிடம் பணம் பெற்றுவரும்படி தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். பெண்ணின் தந்தையும் ரூ.77 லட்சம் வரை பணத்தை கொடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனினும்,  தொடர்ந்து பணம் பெற்றுவரும்படி துன்புறுத்தியதோடு மனைவியின்  விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் வல்லுறவிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, விவாகரத்துக்கு விண்ணப்பிக்கக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  பெண் அனுபவித்த கொடுமைகளின் அடிப்படையில் விவகாரத்து மனு தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி அளித்தது.   பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது கணவர் பணம் காய்க்கும் மரமாக பாவித்துள்ளதாகவும் அவரது கொடுமை எல்லைகளை கடந்ததால் மனைவி விவகாரத்து கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் நீதிமன்றம் கருதியது. அதேவேளையில், திருமண உரிமைகளை மீட்டெடுக்க கோரி பெண்ணின் கணவர் தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து அவர், கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரால் அவரது மனைவி கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக தெரிவித்தார். மனுதாரரின் தாயார் மறைந்த நாளில் கூட தனது மனைவியை கட்டாயப் படுத்தி உடலுறவு கொண்டார் என்றும்,  நோய்வாய்ப்பட்டு இருந்த நாட்களில்  உடலுறவு கொண்டார் என்றும்  மகளின் முன்னால் கூட தனது மனைவியுடன் மனுதாரர் வல்லுறவி ஈடுபட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிக்க: திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. மணமகன் வீட்டாரை அடித்துவிரட்டிய பெண் வீட்டார்


    இதேபோல், வேறு ஒருவருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறி  தனது கணவர் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தி வந்ததாகவும் பாதிக்கப்பட்ட  பெண் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து தீர்ப்பளித்த நீதிமன்றம், தனது மனைவியின் விருப்பமின்றி அவரது கணவர்  வல்லுறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.  மனைவியின் விருப்பத்தையும் உணர்வுகளை அவரது கணவர் மதிக்கவில்லை.  தனது மனைவியின் உடல் தனக்கு சொந்தம் என்ற எண்ணத்தில் அவரது கணவர் இருந்துள்ளார். நவீன சமூக நீதித்துறையில் அப்படி எந்த எண்ணத்திற்கும்  இடமில்லை. இருவரும் சமம் என்ற நிலையே உள்ளது. எனவே, மனைவி மீது எவ்வித எதேச்சதிகாரத்தையும் கணவர் கோர முடியாது. மனைவியின் உடல் தனக்கு சொந்தமானது என கருதி அவரது விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வது கணவர் மனைவி மீது செலுத்தும் வல்லுறவே (Marital rape) ஆகும்.

    மேலும் படிக்க: புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்து சிதறியதில் 15 வயது சிறுவன் பலி.. மருத்துவர் சொன்ன காரணம்!


    பணம் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதோடு, பிறருடன் அவரை தொடர்புப்படுத்தி பேசியது கொடுமையாகும். ஆகவே,  மனைவியின் சுய உரிமையை மதிக்காமல் அவர் மீது உரிமை செலுத்த முயன்ற கணவரின் செயல் வல்லுறவாக கருதப்படும். இதனை காரணமாக காட்டி விவாகரத்து கோரலாம்’ என்று தீர்ப்பளித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: