Home /News /national /

200 கிலோ அசைவ உணவு... ஆண்கள் மட்டுமே நேர்த்திகடன் செலுத்தும் விநோத திருவிழா

200 கிலோ அசைவ உணவு... ஆண்கள் மட்டுமே நேர்த்திகடன் செலுத்தும் விநோத திருவிழா

அசைவ உணவே பிரசாதம்

அசைவ உணவே பிரசாதம்

கழு மரம் ஏறி உச்சியில் இருக்கும் எலும்பிச்சை பழங்கள் கிடைப்பவர்களுக்கு எல்லா நலமும் கிடைக்கும் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை என்கின்றனர் கோயில்  அறங்காவலர் குழுவினர்.

புதுச்சேரியின் கொத்தபுரிநத்தம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமைபெற்ற  ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் கழுமரத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த ஊரை சேர்ந்த பெண்கள் வெளிநாட்டிற்கோ, வெளியூருக்கோ திருமணமாகி சென்றிருந்தாலும் ஆண்டுதோறும் நடக்கும் இத்திருவிழாவில் தவறாது பங்கேற்பது வழக்கம்.

குழந்தை பாக்கியம் , தொழில் விருத்தி , நோய் தீர்வு உட்பட எந்த பிரச்னைக்கு ஆண்கள் விரதம் இருந்து கழுமரம் ஏறி வேண்டுவது மரபாக பின்பற்றப்படுகிறது. இத்திருவிழாவில் ஆண்கள் மட்டுமே நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள். சித்திரை மாதத்தில்  10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கும்.  அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலாவும் நடைபெற்றது.  மேலும் ஊரணி பொங்கல் , சாகை வார்த்தல்,  உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு பால்,  தயிர்,  இளநீர்,  தேன்,  சந்தனம்,  உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது .



அதன்பிறகு செடல் போட்டுக் கொள்ளும்  திருவிழா நடைபெற்றது  ,  இதனைத் தொடர்ந்து அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. அதன் பிறகு  சாமிக்கு கழுமரம்  ஏறும் விழா நடந்தது. அதில் 75 அடி உயரமுள்ள கழு மரத்தில்  காப்பு கட்டிய  ஆண் பக்தர்கள் மட்டும் கழு மரத்தில் ஏறி அமர்ந்து கொள்வார்கள். குறர்  கூடையில் வரும் மோர் அருந்திய பிறகு அங்கிருந்து எலுமிச்சம் பழத்தினை பக்தர்களுக்கு  வீசி எறிவார்கள்.  அந்த பழத்தினை பிடித்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



கழு மரம் ஏறி உச்சியில் இருக்கும் எலும்மிச்சை பழங்கள் கிடைப்பவர்களுக்கு எல்லா நலமும் கிடைக்கும் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை என்கின்றனர் கோயில்  அறங்காவலர் குழுவினர்.



 

இவ்விழாவின் மற்றொரு சிறப்பு ஊர் மக்கள் வீடுகளில் சமைத்த அசைவ உணவை கழுமரம் முன் கும்பம் கொட்டி ( மொத்தமாக வெள்ளை துணியில்) படையலிட்டு  பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்தனர். அந்த வகையில் இவ்வாண்டு 200 கிலோ அசைவ உணவை கொட்டி பிரசாதமாக அளித்தனர்.

அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. கொரோனா காரணமாக இரு ஆண்டுகளாக விழா எடுக்கப்படவில்லை. இரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு கழுமரத்திருவிழா விமர்சையாக அதிக மக்கள் கூட்டத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Hindu Temple, Puducherry

அடுத்த செய்தி