HOME»NEWS»NATIONAL»margazhi utsavam 2020 on digital this year due to corona vai

 Margazhi Utsavam 2020 | இந்த ஆண்டு டிஜிட்டல் தளத்தில் தடம் பதிக்கும் மார்கழி இசை விழா

கொரோனா தாக்கத்தினால் இந்த ஆண்டு டிஜிட்டல் தளத்தில் கால் பதித்திருக்கிறது மார்கழி இசைத் திருவிழா. இந்த மாற்றம் சாத்தியமானது எப்படி?

  • Share this:

மார்கழி இசை... காலம் கடந்து, எல்லைகள் கடந்து, இன்றளவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிவைத்திருக்கும் தொண்மையான தமிழர் பாரம்பரியம். ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாம சங்கீர்த்தனம் முதல் தொடங்கி இசை கச்சேரிகள், நாடகம், நடனம் என கலைகள் அனைத்தையும் கொண்டாடும் மரபு தான் மார்கழி திருவிழா.

கொரோனாவின் தாக்கத்தால் மேடை கச்சேரிகள் நடத்த முடியாத நிலையில், இந்த ஆண்டு "Yours Truly, Margazhi" என்ற பெயரில் இணையதளத்தில் அரங்கேற்றம் கண்டுள்ளது இந்த இசை கலாசாரம்.

சென்னை நகர சபாக்கள் கூட்டமைப்பும், கலாகேந்திரா டாட் காம் என்ற இணையதளமும் இணைந்து, செப்டம்பர் மாதம் முதலே கச்சேரிகளை ஒளிப்பதிவு செய்ததாகவும், இதற்கு அமெரிக்காவில் உள்ள சங்கீத சம்மேளனங்கள் பல உதவியதாகவும் கூறுகிறார் கலாகேந்திரா நிறுவனர் சுதாகர்.



மேடை நிகழ்ச்சிகளை போலவே அட்டவணையை பின்பற்றி தேதி வாரியாக நிகழ்ச்சிகள் வெளியிடப் படுகின்றன. மார்கழி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் காணக் கிடைத்த இடத்தில் புதிய நடைமுறையால் 153 நிகச்சிகளை மட்டுமே காணமுடியும். ஆனால், 3650 ரூபாய் கட்டணத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது சிறப்பம்சமாக உருவெடுத்துள்ளது.

தளம் மாறினாலும், அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதாக கூறும் சுதாகர், இவர்களின் இந்த முயற்சிக்கு யூ டியூப் நிறுவனமும் கை கொடுத்ததாக குறிப்பிடுகிறார்.



Yours Truly, Margazhi தளத்தில் நிகழ்ச்சிகளை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான கடவுச்சொல் வழங்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Vaijayanthi S
First published: