Home /News /national /

பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு பேருந்துக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்.. ஆந்திராவில் அட்டூழியம்..

பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு பேருந்துக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்.. ஆந்திராவில் அட்டூழியம்..

நன்றி - தி இந்து

நன்றி - தி இந்து

Maoists | ஆந்திரா - சத்தீஸ்கர் எல்லையில் சொகுசு பேருந்துக்கு மாவோயிஸ்ட்டுகள் தீ வைத்து சாம்பலாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவேலா பகுதியில் ஒடிசாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தை தடுத்து நிறுத்திய மாவோயிஸ்ட்டுகள் அதிலிருந்த பயணிகளை இறக்கி விட்டு பேருந்துக்கு தீ வைத்துவிட்டு பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.

    நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட மாவோஸ்ட் அமைப்பின் கோண்டா பகுதி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நடுவழியில் நின்று கொண்டிருந்த 40 பயணிகளை வேறு பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் இச்சம்பவத்தில் சட்டீஸ்கர் மாநிலம் ஜெய்போர் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற இடமானது சிந்தூர் போலீஸ் தலைமயகத்தில் இருந்து வெறும் 3 கிமீ தொலைவில் தான் இருந்துள்ளது.

    இந்த சம்பவம் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் காணப்படும் ஆந்திரா-சத்தீஸ்கர் மாநில எல்லையில் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதி அருகேயுள்ள தண்டகாரன்யம் என்ற பகுதியைச் சேர்ந்த 62 வயது பெண் மாவோயிஸ்ட்டான நிர்மலா என்பவர் 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    இவர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இன்று அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிர்மலாவுக்கு காவல்துறை உரிய மருத்துவ சிகிச்சை வழங்கவில்லை என மாவோயிஸ்ட்டுகள் குற்றஞ்சாட்டிய நிலையில், ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: சட்டவிரோத ஆயுத பயிற்சி - தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாவோயிஸ்டுகள் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Andhra Pradesh, Maoist

    அடுத்த செய்தி