உத்தர பிரதேசத்தின் குஷிநகரை சேர்ந்தவர் மான்யா சிங். பெமினா மிஸ் கிராண்ட் இந்தியா 2020-ஆம் ஆண்டுக்கான அழகி போட்டியில் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார். ரிக்சா ஓட்டுனரின் மகளான மான்யா சிங் என்பவர் மிஸ் இந்தியா 2020-ஆம் ஆண்டின் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார்.
கடுமையான உழைப்பாளியான ரிக்ஷா ஓட்டுநரின் மகளான இவர் உழைப்பின் அனுபவங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உணவு, தூக்கம் இல்லாமல் பல இரவுகளை கழித்துள்ளார். சில ரூபாய் பணம் சேமிப்புக்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார். அவர் விரும்பிய புத்தகங்கள் மற்றும் உடைகள் அவருக்கு கிடைக்கவில்லை என்பதை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மிஸ் 2020 வெற்றியாளர்கள்
மான்யா ஓம்பிரகாஷ் சிங்கின் பெற்றோர் தங்களிடம் இருந்த கொஞ்சம் நகையையும் மகளின் கல்வி கட்டணத்திற்காக அடகு வைத்துள்ளனர். கல்வி வலிமையான ஆயுதம் என்று நம்புகிறேன். அனைத்து நேரங்களிலும் அது அவர்களுடன் இருக்கும் என மான்யா சிங் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய மேல்நிலைப் பள்ளி படிப்பில் சிறந்த மாணவிக்கான விருது வென்றுள்ளார். பள்ளி கட்டணம் செலுத்தவோ, புத்தகங்களை பெறவோ கூட வசதியில்லாமல் வாழ்க்கையில் கடுமையாக போராடியதை குறிப்பிட்டுள்ளார்.
மான்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், பகலில் படித்து, மாலையில் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, இரவில் கால் சென்டரில் வேலை செய்துள்ளேன் என தெரிவித்து உள்ளார். பல இடங்களுக்கு செல்வதற்கு மணிக்கணக்கில் நடந்து சென்றேன். அதனால், ரி்க்ஷாவுக்கு கொடுக்கும் கட்டண தொகையை சேமித்தேன் என அவர் பதிவிட்டு உள்ளார். நீங்கள் ஈடுபாட்டுடன் உழைத்தால், அனைத்தும் சாத்தியமாகும் என உலகிற்கு காட்டவே நான் பெமினா மிஸ் இந்தியா 2020 போட்டியில் கலந்துகொண்டு தேர்வாகியிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.