Home /News /national /

ஒமைக்ரான்: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாநிலங்கள்

ஒமைக்ரான்: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாநிலங்கள்

ஓமைக்ரான்

ஓமைக்ரான்

டெல்டாவை விட 3 மடங்கு வேகமாக ஒமைக்ரான் (Omicron ) பரவும் என்பதால் பல்வேறு மாநிலங்கள் தற்போதே கட்டுப்படுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

    ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரையில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250 ஐ நெருங்கும் நிலையில், முதலில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது வெளிநாடு பயணம் மேற்கொள்ளாத பலரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்டாவை விட 3 மடங்கு வேகமாக ஒமைக்ரான் பரவும் என்பதால் பல்வேறு மாநிலங்கள் தற்போதே கட்டுப்படுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளப், பார், அடுக்குமாடி குடியிறுப்பு என அனைத்து இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரையில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளப், உணவகங்கள் போன்ற இடங்களில் நுழைய தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாரஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் தொற்று பாதிப்பு அச்சத்தால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒமைக்ரான், தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது.

    Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் உறுதி....! ₹1000 அல்லது ₹2000 வழங்க வாய்ப்பு

    இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவி இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    Must Read : கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லை என்றால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

    தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக ஏற்கெனவே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்தும், அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு இருக்கும் கட்டுப்பாடுகள், மருத்துவ வசதிகள், தடுப்பூசி நிலவரம் ஆகியவற்றை அறிய சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி