• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவில் கண்டறியப்பட்ட ஏ.ஒய் 4.2 கொரோனா வைரஸ் வேகமாக பரவும்: மத்திய அமைச்சர் விளக்கம்

இந்தியாவில் கண்டறியப்பட்ட ஏ.ஒய் 4.2 கொரோனா வைரஸ் வேகமாக பரவும்: மத்திய அமைச்சர் விளக்கம்

மன்சுக் மாண்டவியா

மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்ட ஏஒய் 4.2 கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மைக் கொண்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் பரவி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.44 கோடியைத் தாண்டியுள்ளது. 49 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் ஞாயிற்று கிழமை ஒரே நாளில் 35,660 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 1,072 பேர் உயிரிழந்தனர்.

    அங்கு நவம்பர் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதால் இந்தியாவிலும் கொரோனா மூன்றாவது அலை தொடங்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தநிலையில், ஏஒய் 4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு தென்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    நம் நாட்டில் இரண்டாவது அலை பரவலுக்கு காரணமாக, டெல்டா வகையின் ஒரு பகுதியான இந்த வைரஸ் இருந்தது. மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, இந்த புதிய தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘பிரிட்டனில் கொரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கையை அதிகரித்ததாக நம்பப்படும் டெல்டா வகை கொரோனா வைரஸ் துணை வகையான ஏஒய். 4.2 குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.

    ஒரு குழு கோவிட்-19 ஏஒய். 4.2 பற்றி ஆராய்ந்து வருகிறது. ஐசிஎம்ஆர் உள்ளிட்ட குழுக்கள் வெவ்வேறு வகைகளை பகுப்பாய்வு செய்கின்றன. உலக சுகாதார நிறுவவனம் ஏஒய். 4.2 டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியது என்பதால் அதை ஆராய்ந்து வருவதாகக் கூறியது’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: