மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் ஆலோசனை மேற்கொண்டன.
இந்த நிலையில் உருமாறிய கொரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று பிற்பகல் 3 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்துதல், மாநில தடுப்பூசி நிலவரம் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும். முந்தைய கொரோனா அலைகளை தடுக்க பணியாற்றியது போலவே, தற்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கொரோனா பயம்! 3 ஆண்டுகள் வீட்டு அறையை விட்டு வெளிய வராத பெண்கள்..போலீஸ் உதவியுடன் மீட்பு
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சோதனை - தடமறிதல் - சிகிச்சையளித்தல் - தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தல் என்ற வியூகத்தை தொடர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மாநிலங்கள் கொரோனா தொடர்பான கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதோடு, சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, Omicron BF 7 Variant