ஹோம் /நியூஸ் /இந்தியா /

குறுக்கே நின்ற கார்.. ஹாரன் அடித்த பெண்.. கொலைவெறித் தாக்குதல் செய்த நபர்!

குறுக்கே நின்ற கார்.. ஹாரன் அடித்த பெண்.. கொலைவெறித் தாக்குதல் செய்த நபர்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தாக்குதலில் பெண்ணின் இடது கண், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Haryana, India

கார் ஹாரனை அடித்து வழிவிடச் சொன்ன பெண்ணை ஒரு நபர் அடித்து தாக்கிய சம்பவம் குருகிராம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த பெண் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல கடந்த புதன்கிழமை காலை வேலைக்கு சென்றுள்ளார். தனது காரில் பெண் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் எம்டிஐ சவுக் பகுதியில் மற்றொரு கார் ஒன்று குறுக்கே சென்ற நிலையில், இந்த பெண் ஹாரன் அடித்து வழிவிடக் கூறியுள்ளார்.

அந்த காரை தாண்டி பெண் சென்ற நிலையில், பின்னால் இருந்த அந்த கார் ஓவர்டேக் செய்து, பெண்ணின் வாகனத்தின் குறுக்கே நிறுத்தியுள்ளது. அந்த பெண் பிரேக் அடித்து காரை நிறுத்திய நிலையில், எதிரே இருந்த காரில் இருந்து இறங்கிய நபர் ஆத்திரத்துடன் பெண்ணை நோக்கி வந்துள்ளார். காரில் இருந்து பெண்ணை இழுத்து சரமாரியாக அடித்து தாக்கத் தொடங்கியுள்ளார்.

உன்னை வீடு தேடி வந்து மீண்டும் அடிப்பேன், கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்த தாக்குதலில் பெண்ணின் இடது கண், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அங்கு கூட்டம் கூடியதைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, போலீசில் வந்து சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

இதையும் படிங்க: ''பாஜகவில் சேருங்கள் இல்லையென்றால் புல்டோசர் தான்'' அமைச்சர் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டு குற்றவாளியை தேடி வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட நபரை நிச்சயம் பிடித்துவிடுவோம் என பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் ஹரேஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.

First published:

Tags: Brutal attack on woman, Crime News, Gurugram, Woman