• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவா மாநில முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கர் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார். பின்னர், கோவாவில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த பிறகு, 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கோவா முதல்வராக இருந்தார்.

    இந்தநிலையில், கடந்த வருடம் கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சைப் பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்கள் அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்றுவந்தார். நாடு திரும்பிய அவர், முதல்வராக பணியாற்றிவந்தார். அவ்வப்போது, முதல்வர் அலுவலகமும் வந்தார்.

    இருப்பினும், அவரது உடல்நிலை முழுவதுமாக முழுவதும் சரியாகவில்லை. தொடர்ச்சியாக அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டுவந்தது. மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக் கிடமானதை அவரது அலுவலகம் உறுதி செய்தது.

    இந்தநிலையில், மனோகர் பாரிக்கர் உயிரிழந்த தகவலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழந்த தகவலைக் கேட்டு மிகவும் துயரமடைந்தேன். பொது வாழ்க்கையில் அர்பணிப்புடன் இருந்தவர், நேர்மையின் மறுவடிவம். கோவா மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் அவர் ஆற்றிய சேவை ஒரு போதும் மறக்க முடியாது’ என்று பதிவிட்டுள்ளார்.



    Also see:

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: