Home /News /national /

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார் - அமித் ஷா திட்டவட்டம்

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார் - அமித் ஷா திட்டவட்டம்

மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர்

  • News18
  • Last Updated :
    கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் தொடர்வார் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    கோவாவில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கூட்டம் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் தொடர்வார் என்றும், அதே நேரத்தில் விரைவில் கோவா மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி, அமெரிக்காவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர், அவர் கோவாவுக்கு திரும்பி தனது பொறுப்புகளை ஆற்றத் தொடங்கினார்.

    இந்நிலையில், அவரது உடல்நிலையில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: Amit Shah, BJP, Goa cm, Manohar parrikar

    அடுத்த செய்தி