ஹரியானா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் மனோகர் லால் கட்டார்... துணை முதல்வரானார் துஷ்யந்த் சவுதாலா...!

ஹரியானா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் மனோகர் லால் கட்டார்... துணை முதல்வரானார் துஷ்யந்த் சவுதாலா...!
துஷ்யந்த் சவுதாலா | மனோகர் லால் கட்டார்
  • News18
  • Last Updated: October 27, 2019, 2:30 PM IST
  • Share this:
ஹரியானா முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் துணை முதலமைச்சராக ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்றார்.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவுக்கு 40 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே ஹரியானா லோகித் கட்சியின் தலைவராக கோபால் காந்தா ஆதரவு தெரிவித்தும், அதனை ஏற்க பாஜக மறுத்துள்ளது.

இந்நிலையில் சண்டிகரில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவராக மனோகர் லால் கட்டார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.


இதையடுத்து ரவிசங்கர் பிரசாத் உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற மனோகர் லால் கட்டார், ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினார். கட்டாருக்கு சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேர் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 57 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதை அடுத்து ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஹரியானா முதலமைச்சராக மனோகர் லால் கட்டாரும், துணை முதலமைச்சராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சரவை வேறு ஒரு நாளில் பதவியேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also See...
First published: October 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading