மான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 70-வது முறையாக இன்று உரையாற்றுகிறார்.

மான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி
  • Share this:
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்று அழைக்கப்படும் காலத்தின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, 70-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். அந்த வகையில் அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, காலை 11 மணிக்கு பிரதமர் உரையாற்றவிருக்கிறார்.
அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது.மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, Namo app, mygov போன்ற செயலிகள் மூலமாக ஏற்கெனவே பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading