மன் கி பாத் : தடகள ஜாம்பவான் மில்கா சிங்கை மறக்க முடியுமா - நினைவுகளை பகிர்ந்துக்கொண்ட பிரதமர் மோடி

மோடி

மில்கா சிங் மருத்துவமனையில் இருந்தபோது அவரோடு பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நான் அவரிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர் மோடி, தடகள ஜாம்பவான் மில்கா சிங் உடனான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

  ”ஒலிம்பிக்ஸ் பற்றிய பேச்சு வரும்போது, மில்கா சிங் என்ற தடகள ஜாம்பவானை யாரால் மறந்து விட முடியும் சொல்லுங்கள். சில நாள்கள் முன்பாக, கொரோனா பெருந்தொற்று அவரை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரோடு பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நான் அவரிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

  Also Read: MSDhoni : என்ன தல நீங்களே இப்படி பண்ணலாமா? -விமர்சனத்துக்குள்ளான தோனியின் புகைப்படம்

  நீங்கள் 1964-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கெடுத்துக் கொண்டீர்கள், ஆகையால் இந்த முறை நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸில் பங்கெடுத்துச் செல்லும்போது , நீங்கள் நமது வீரர்களின் மனோபலத்தை அதிகப்படுத்த வேண்டும், உங்கள் செய்தியால் அவர்களுக்கு உத்வேகமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவர் விளையாட்டில் எத்தனை அர்ப்பணிப்பு உள்ளவர் எத்தனை உணர்வுமயமானவர் என்றால் நோய் பாதிப்பு இருந்ததையும் தாண்டி, உடனடியாகத் தனது சம்மதத்தை தெரிவித்தார். ஆனால் துர்பாக்கியவசமாக விதியின் முடிவு வேறு விதமாக இருந்தது. 2014-ம் ஆண்டு அவர் சூரத் வந்திருந்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.

  நாங்கள் இரவு மாரத்தான் போட்டி ஒன்றைத் தொடங்கி வைத்தோம். அப்போது அவரோடு நான் கலந்து பேசிய பொழுது, விளையாட்டுகள் பற்றிப் பேசினோம், அது எனக்கு மிகுந்த கருத்தூக்கமாக அமைந்தது. மில்கா சிங் அவர்களின் குடும்பம் முழுவதுமே விளையாட்டில் அர்ப்பணிப்பு உடையது. பாரதத்திற்குப் பெருமை சேர்ப்பது என்பதை நாமறிவோம்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: