ஹோம் /நியூஸ் /இந்தியா /

குடியரசு தினத்தன்று தேசியக் கொடி அவமானப்படுத்தப்பட்டதால் இந்தியா வேதனையடைந்தது - மன் கி பாத்தில் மோடி வருத்தம்

குடியரசு தினத்தன்று தேசியக் கொடி அவமானப்படுத்தப்பட்டதால் இந்தியா வேதனையடைந்தது - மன் கி பாத்தில் மோடி வருத்தம்

மோடி

மோடி

குடியரசு தினத்தன்று தேசியக் கொடி அவமானப்படுத்தப்பட்டதால் இந்தியா வேதனையடைந்தது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று வானொலி மூலம் மக்களுக்கு மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறது. அந்த வகையில் அவரது 73-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். இந்த வருடத்தின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியில் குடியரசு தின வன்முறை, ஆஸ்திரேயாவுக்கு எதிரான இந்தியா வெற்றி, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். இன்று அவர், ‘கொரோனா தடுப்பூசி போடும் நாடுகளில் இந்தியாதான் மிக வேகமாக 30 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.

  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவது இந்தியாவின் தன்னம்பிக்கைக்கு அடையாளது. மேலும், அது சுய பெருமைக்கு அடையாளம். இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் உலகத்துக்கு முன்மாதிரியாக உள்ளது. உலகத்தின் எல்லா நாடுகளையும் விட நாம் நம் குடிமகன்களுக்கு வேகமாக தடுப்பூசி செலுத்துகிறோம்.

  15 நாள்களில் நாம் 30 லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம். அமெரிக்கா 18 தினங்களிலும், பிரிட்டன் 36 தினங்களிலும் இந்த எண்ணிக்கையை எட்டியது. குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடி அவமானப்படுத்தப்பட்டதால் இந்தியா வேதனையடைந்தது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Mann ki baat, Modi