ஹோம் /நியூஸ் /இந்தியா /

மன்மோகன் சிங் சிறந்த நபர் தான், ஆனால்.. விவாதமாகும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்து

மன்மோகன் சிங் சிறந்த நபர் தான், ஆனால்.. விவாதமாகும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்து

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

மன்மோகன் சிங் தனது ஆட்சி காலத்தில் பல முடிவுகளை அவர் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் இந்தியாவின் பொருளாதாரம் முடங்கியது என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முன்னோடியுமாக திகழ்பவர் நாராயண மூர்த்தி. டாப் ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தி, தற்போது நிறுவன நிர்வாக பணிகளில் இருந்து விலகி கல்வித்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐஎம் - அகமதாபாத்தில் இளம் தொழில் முனைவோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

  அப்போது அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு குறித்து கூறிய கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் கருத்தரங்கில் கூறியதாவது, " 2008 முதல் 2012ஆம் ஆண்டு காலத்தில் நான் லண்டனின் எச்எஸ்பிசியின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளேன்.

  அப்போது ஆரம்ப காலத்தில் எங்கள் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் சீனா குறித்து இரண்டு, மூன்று முறை பேசுவோம், இந்தியா குறித்து ஒரு தடவை பேசுவோம். ஆனால் பின்னர் நான் குழுவில் இருந்து வெளியேறிய காலத்தில் சீனாவை பற்றிய பேச்சு 30 தடவையும் இந்தியா குறித்த பேச்சு இல்லமாலேயே போனது. 1978 முதல் 2022 என்ற 44 ஆண்டு காலத்தில் இந்தியாவை ஆறு மடங்கு பின்னுக்கு தள்ளி சீனா வளர்ந்துள்ளது.

  இதையும் படிங்க: பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி திட்டம் : அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு

  மன்மோகன் சிங் சிறந்த மனிதர் தான். ஆனால், அவரின் ஆட்சி காலத்தில் பல முடிவுகளை அவர் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் இந்தியாவின் பொருளாதாரம் முடங்கி பெரும் பாதிப்பை கண்டுள்ளது. முடிவு எடுக்க தாமதமானால் அனைத்து விஷயங்கள் தள்ளிப்போகும். அதேவேளை 1991 பொருளாதார சீர்திருத்திற்கு மன்மோகன் சிங் பெரும் பங்காற்றியுள்ளார்" என்றார்.

  மன்மோகன் சிங் அரசு ஆட்சியை இழந்து 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முன்னணி தொழிலதிபர் அன்றைய ஆட்சி குறித்து கூறிய கருத்து விவாதப்பொருளாக மாறியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Indian economy, Infosys, Manmohan singh