குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத் திட்டத்திற்காக புதிய வரிகள் விதிக்கப்படாது: மன்மோகன் சிங்

நியாய் திட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கண்ணியத்தையும், மரியாதையையும் ஏற்படுத்தித் தரக்கூடியது.

Web Desk | news18
Updated: April 21, 2019, 12:55 PM IST
குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத் திட்டத்திற்காக புதிய வரிகள் விதிக்கப்படாது: மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்
Web Desk | news18
Updated: April 21, 2019, 12:55 PM IST
நியாய் (NYAY) எனப்படும் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத் திட்டம், புதிய வரி எதுவும் இல்லாமல் வறுமையை ஒழிக்கும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத் திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங், "20 விழுக்காடு ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உரிய ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான திட்டம்.

நாடு சுதந்திரமடைந்த போது 70 விழுக்காடு மக்கள் ஏழைகளாக இருந்தனர். கடந்த 70 ஆண்டுகளில் அது 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

கடைசி நபரையும் வறுமையில் இருந்து மீட்க இதுவே உரிய நேரம். நியாய் திட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கண்ணியத்தையும், மரியாதையையும் ஏற்படுத்தித் தரக்கூடியது.

இதன் மூலம் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் புதிய சகாப்தத்துக்குள் இந்தியா நுழையும். நியாய் திட்டம் தேங்கி நிற்கும் நமது பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதுடன், புதிய தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

இந்தத் திட்டத்திற்கு மொத்த ஜிடிபியில் 1 புள்ளி 5 விழுக்காடு நிதியே தேவைப்படும். நடுத்தர மக்களின் மீது எந்த புதிய வரியும் விதிக்கப்படாது. காங்கிரஸ் தலைமையில் அமையும் புதிய அரசு இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும்.” என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
Loading...
First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...