• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திடீர் உடல்நலக் குறைபாடு- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல்நலக் குறைபாடு- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

கோப்புப் படம்

கோப்புப் படம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைபாட்டின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்துவருபவர் மன்மோகன் சிங். அவருக்கு வயது 89. 1991-ம் ஆண்டில் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது இந்தியாவில் தாராளமயக்கொள்கைகளை அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங். அதன் பிறகு, 2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது யாரும் எதிர்பாராதவிதமாக மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார். அவர், தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.

    தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவருகிறார் மன்மோகன் சிங். இந்தநிலையில் இன்று திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இதயஅறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: