Home /News /national /

மலிவு விலையில் கோவிட்-19 anti-viral மருந்து - மேன்கைன்ட் ஃபார்மாஅறிமுகம்

மலிவு விலையில் கோவிட்-19 anti-viral மருந்து - மேன்கைன்ட் ஃபார்மாஅறிமுகம்


மலிவு விலையில் கோவிட்-19 anti-viral மருந்து

மலிவு விலையில் கோவிட்-19 anti-viral மருந்து

கோவிட் 19 தொற்று அறிகுறிகள் அதிகரிக்கும் போது, எமர்ஜென்சி சூழ்நிலையில் சிகிச்சையின் ஒரு பகுதியாக இந்த மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தீர்வே கிடைக்காதா என்று இருந்த நிலை மாறி, தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. கோவிட் தடுப்பூசி, வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதன் தீவிரத்தை குறைக்க உதவும் மற்றும் கோவிட் தொற்று ஏற்படாமல் இருக்கும் சாத்தியத்தை அதிகப்படுத்தும்.

நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது நிலைமை தீவிரமாக மாறியது. எனவே, கோவிட் வைரஸ் தொற்று தீவிரமாகாமல் பாதுகாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆன்டிவைரல் மருந்தை மேன்கைன்ட் ஃபார்மா நிறுவனம் மிக குறைந்த விலையில அறிமுகப்படுத்துகிறது.

எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின் படி மேன்கைன்ட் நிறுவனம், மோனுலைஃப் என்ற பிராண்டு பெயரில் தயாரிக்கும் கேப்ஸ்யூல் பெயர் மோல்னுபிராவர். ஒரு கேப்ஸ்யூலின் விலை ரூ. 35 என்று நிர்ணயிக்கப்பட்டள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று, ஐந்து நாட்களுக்கு இந்த மருந்தை எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு 800 mg. அதன் படி, இந்த மருந்து 200 எம்ஜி என்ற அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பரிந்துரைக்கப்பட்ட டோசேஜ் பெற, 40 கேப்ஸ்யூல்களை உட்கொள்ள வேண்டும். அதன் படி, மேன்கைன்ட் ஃபார்மா நிறுவனரான ஆர்ஜே ஜூனேஜா, இந்த மருந்தின் முழு சிகிச்சைக்கான தொகை ரூ. 1,400 என்று கூறினார்.

மேலும், இந்த ஆன்டிவைரல் மருந்து எல்லாருக்குமானது கிடையாது. யாரெல்லாம் இந்த ஆன்டி-வைரல் மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு மருத்துவ வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.கோவிட் 19 தொற்றால் தீவிர பாதிப்புக்கு உள்ளானவ அடல்ட் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. டோரன்ட், சிப்லா, சன் பார்மாஃ, டாக்டர் ரெட்டிஸ் லாப்ஸ், மைலான், ஹெட்டரோ உள்ளிட்ட 13 இந்திய மருந்து நிறுவனங்கள் இந்த antiviral மாத்திரையை தயாரிக்க முன்வந்துள்ளது.

ALSO READ |  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - விசாரணை அறிக்கை தாக்கல்.. வெளியான புதிய தகவல்கள்

கோவிட் 19 தொற்று அறிகுறிகள் அதிகரிக்கும் போது, எமர்ஜென்சி சூழ்நிலையில் சிகிச்சையின் ஒரு பகுதியாக இந்த மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

ஏற்கனவே இந்த மருந்து உற்பத்தியில் பல நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அதையடுத்து சிப்லா, சன் ஃபார்மா மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரி ஆகிய மூன்று நிறுவனங்களின் மருந்தும் இன்னும் சில வாரங்களில் வெளியாகும். ஆனால், வெவ்வேறு மருந்து உற்பத்தி நிறுவனமும் வெவ்வேறு விலையை நிர்ணயித்துள்ளன. இதுவரை மேன்கைன்ட் ஃபார்மா மட்டுமே மலிவு விலையில் இந்த மருந்தை தருவதாகக் கூறியுள்ளது. மற்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை, முழு சிகிச்சையாக இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் போது, அதன் விலை ரூபாய் 2000 முதல் 3000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ |  வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..

சிப்லா நிறுவனம், சிப்மோல்னு என்ற பெயரில் மோல்னுபிராவிரை சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. விரைவில் அனைத்து கோவிட் சிகிச்சை மையங்களிலும், முன்னணி மருந்து கடைகளிலும் சிப்மோல்னு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Covid-19

அடுத்த செய்தி