தனது கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு 30 ஆண்டுகளாக கால்வாய் வெட்டிய ரியல் ஹீரோ..

லாங்கி பூயான்

தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதி தனி ஒருவனாக இவர் செய்த சாதனை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த பதிவை பார்த்த ஏரளாமானோர் லாங்கிக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

 • Share this:
  தனது கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வர 30 ஆண்டுகளாக கால்வாய் வெட்டியிருக்கிறார் பீஹார் நாயகன் லாங்கி புயான்.

  கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகாரை சேர்ந்த தஷ்ரத் மஞ்சி என்பவர் மலையில் இருந்து விழுந்த தனது இறந்த மனைவிக்காக, மலையை குடைந்து ஒரு பாதையை செதுக்க 22 ஆண்டுகள் பாடுபட்ட சமபவம் நடந்தது. இதேபோல தற்போது பிகாரில் உள்ள கயாவை சேர்ந்த ஒருவர் மலைகளிலிருந்து தனது கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக கால்வாய் தோண்டியுள்ளார்.

  கடந்த 30 ஆண்டுகளாக தனியொருவராக பணிபுரிந்து வரும் லாங்கி பூயான், 3 கி.மீ நீளமுள்ள கால்வாயை தனது கிராமத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் இருந்து தொடங்கி தனது கிராமத்தின் வயல்களுக்கு வெட்டி சென்றுள்ளார். பீகாரில் உள்ள கயாவின் லஹ்துவா பகுதியில் உள்ள கோத்திலாவா, என்ற இடத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல இந்த பணிகளை அவர் செய்ததாக ANI செய்தி நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து பேசிய லாங்கி, கடந்த 30 ஆண்டுகளாக நான் அருகிலுள்ள காட்டுக்கு சென்று எனது கால்நடைகளை மேய்ப்பதுடன், கால்வாயை தோண்டி எடுப்பேன். இந்த முயற்சியில் யாரும் என்னுடன் சேரவில்லை. கிராம வாசிகள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்க நகரங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் நான் இங்கேயே இருக்க முடிவு செய்தேன், "என்று அவர் கூறினார்.

  மேலும் படிக்க: 1200 கி.மீ ஸ்கூட்டரில் பயணித்து கருவுற்ற மனைவியை தேர்வெழுத வைத்த பழங்குடியின சமையல் தொழிலாளி..

  பொதுவாக மழைக்காலங்களில் மலைகளிலிருந்து விழும் நீர் ஆற்றில் கலக்கிறது. இது லாங்கி பூயானை வருத்தமடைய செய்தது. அதைத் தொடர்ந்து அவர் ஒரு கால்வாயை வெட்ட  நினைத்தார். அதன்படி போராடி கால்வையும் வெட்டி முடித்துள்ளார். பூயானின் பல ஆண்டு உழைப்பு அங்குள்ள ஏராளமான விலங்குகள் மற்றும் மக்களுக்கு பயனளிக்கிறது என்பதை அங்குள்ள உள்ளூர் வாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தற்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.

  கயாவில் உள்ள மக்களுக்கான முக்கிய தொழில் விவசாயம் மற்றும் விலங்கு வளர்ப்பு. அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட கயா மாவட்ட தலைமையகத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள கோதிவாலா கிராமம் மாவோயிஸ்டுகளுக்கு அடைக்கலமாக குறிக்கப்பட்டுள்ளது. பூயான் கடந்த 30 ஆண்டுகளாக கால்வாயை வெட்டி வருகிறார். அதுவும் அவர் மட்டுமே முழு பணிகளையும் செய்துள்ளார்.

  இது ஏராளமான விலங்குகளுக்கு பயனளிக்கும் மற்றும் வயல்களுக்கும் நீர்ப்பாசனம் செய்யவும் எதுவாக இருக்கும் என அவர் கருதினர். அதன்படி பூயானின் இத்தகைய செயலால் அந்த கிராம மக்கள் மழைக்காலத்தில் தண்ணீரால் பயனடைகிறார்கள். அவர் தனது சொந்த நலனுக்காக இதை செய்யவில்லை. தனது கிராம பகுதி மக்கள் பயன்பெறவே இதை செய்கிறார் என்று "பட்டி மஞ்சி, என்கிற ஒரு உள்ளூர் வாசி ஒருவர் கூறியுள்ளார்.

  லாங்கி பூயான்னின் இந்த கால்வாய் வெட்டும் முயற்சியின் புகைப்படங்களை ANI செய்தி நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. 30 ஆண்டுகளாக 3 கி.மீ நீளமுள்ள கால்வாயை வெட்டிய பீகார் மனிதன் அனைவரையும் வியப்படைய செய்துள்ளார். தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதி தனி ஒருவனாக இவர் செய்த சாதனை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த பதிவை பார்த்த ஏரளாமானோர் லாங்கிக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Gunavathy
  First published: