Home /News /national /

ஆம் ஆத்மியை பிரித்து பாஜகவில் இணைய அழைப்பு.. டெல்லி துணை முதலமைச்சர் பகீர்..

ஆம் ஆத்மியை பிரித்து பாஜகவில் இணைய அழைப்பு.. டெல்லி துணை முதலமைச்சர் பகீர்..

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.

‘என் தலையை கொய்வேனேத் தவிர பாஜகவில் இணையமாட்டேன்’ - மணீஷ் சிசோடியா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    டெல்லி மதுபான ஊழல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆம் ஆத்மி கட்சியை பிரித்து பாஜகவில் இணைய தனக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

    டிவிட்டரில் இது சம்பந்தமாகப் பதிவிட்டுள்ள சிசோடியா பாஜகவின் அழைப்பை ஏற்றால் அனைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளும் முடித்து வைக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் “பாஜகவிற்கு என்னுடைய பதில்- நான் ஒரு ராஜபுத்திரன். மகாரானா பிரதாப்பின் வழிவந்தவன். நான் தலையைக் கொய்துகொள்வேன். ஆனால் சரணயடையமேட்டேன். ஊழல்மிக்க சூழ்ச்சிக்காரர்களை தலை வணங்கமாட்டேன். எனக்கு எதிரான அத்தனை வழக்குகளும் பொய்யானவை. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்யுங்கள்.” என தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜுலை மாதம் டெல்லி அரசின் துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா டெல்லி அரசின் 2020-21ம் ஆண்டுக்கான கலால் வரி திட்டத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் அதனால் அதை சிபிஐ விசாரிக்கவேண்டும் எனவும் பரிந்துரைத்தார். மேலும் டெல்லி அரசு மதுபான ஆலைகளின் வரிநிலுவை தொகை ரூ.144 கோடியை தள்ளுபடி செய்ததிலும் குளறுபடிகள் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் மினிஷ் சிசோடியாவின் பெயரும் சேர்க்கப்பட்டது. இது தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி சிபிஐ டெல்லியில் 31 இடங்களில் ரெய்டு நடத்தியது. அதில் மனிஷ் சிசோடியாவின் வீடும் ரெய்டுக்கு உள்ளானது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal

    அடுத்த செய்தி