மணிப்பூரில் துணை முதல்வர் உட்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா: ஆளும் பா.ஜ.க அரசுக்கு சிக்கல்...

மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 4 பேர் ராஜினாமா செய்துள்ளதால் பாஜக அரசிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் துணை முதல்வர் உட்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா: ஆளும் பா.ஜ.க அரசுக்கு சிக்கல்...
  • Share this:
மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 4 பேர் ராஜினாமா செய்துள்ளதால் பாஜக அரசிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக பிரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜகவிற்கு ஆதரவளித்து வந்த தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர்கள், துணை முதல்வர் ஜாய்குமார் சிங் உள்ளிட்ட 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதனிடையே பாஜக கட்சியை சேர்ந்த சுபாஷ்சந்திரா சிங், டிடி.ஹகோகிப் மற்றும் சாமுவேல் ஜின்டாய் ஆகிய 3 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

மணிப்பூரில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக குறைந்துள்ளது. இதனால் சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தி பாஜகவுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மணிப்பூர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading