மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது இளைய சகோதரனை பாதுகாப்புடன் ஆதரவளித்தவாரே
வகுப்பறையில் பாடம் படித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நாகா இனமக்கள் அதிகமாக வாழும் மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள டைலாங் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சிறுமி மனிங்சிலியு படித்து வருகிறார். இவருக்கு வயது 11. பொருளாதார நெருக்கடி காரணமாகவும், தொடர்ச்சியான வறுமை காரணமாகவும் பெற்றோர் இருவரும் விவாசயத் தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, குடும்பத்தில் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் நிலவி வருகிறது என்பதை இந்த மாணவி உணர்ந்திருக்கிறார். எனவே, தான் பள்ளிக்குச் செல்லும் தனது இளைய சகோதரனை உடன் அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தனது சகோதரனை பாதுகாப்புடன் ஆதரவளித்தாரே, பாடம் கற்கும் சிறுமி
இந்த புகைப்படம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் தேசிய அளவிலும் பேசும் பொருளானது. தகுந்த நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு, சிறுமியின் துயரங்களை மீட்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்து வந்தன. இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் மாநில அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை குழந்தைக்கு ஆதரவு கரங்கள் நீட்டத் தொடங்கின.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அம்மாநிலத்தின் ஊரகத்துறை அமைச்சர் பிஸ்வஜீத், சிறுமியின் குடும்பத்தினரை உடனடியாக தலைநகர் இம்பால் வரவழைத்து சந்தித்தார். தனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார். பட்டப்படிப்பு முடிக்கும் வரை சிறுமியின் கல்வி செலவீனங்களை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில், இதில் தான் மிகுந்த கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறினார்.
மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங் தனது முகநூல் பக்கத்தில், " சிறுமியின் குடும்பத்தினருக்கு தேவையான அவசர உதவிகளை செய்து கொடுக்க குழுவை அனுப்பப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் பயன்களை மேலும் எவ்வாறு நீட்டிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனது அமைச்சரவை சகா உடனடியாக சிறுமையின் குடும்பத்தை சந்தித்த செய்தியைக் கேள்விப்பட்ட போது, மகிழ்ச்சியான உணர்வு ஏற்பட்டது" என்று பதிவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.