மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி தனது பள்ளிக்கு உடன் பிறந்த கைக்குழந்தையை அழைத்துவந்து மடியில் வைத்துக்கொண்டே பாடம் படித்த புகைப்படம் கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில் வைராலானது.
மெய்நிங்க்ஸின்லியு பமேய்(Meiningsinliu Pamei) என்ற அந்த 10 வயது சிறுமி டமேன்க்லாங் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் டைலாங் என்ற பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்துவருகிறார். இவரின் பெற்றோர் விவசாய வேலை செய்து வரும் நிலையில், பெற்றோரின் பணிக்காரணமாக அவர்களின் கைக்குழந்தையை பகல் நேரத்தில் கவனித்துக்கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக இந்த 10 வயது சிறுமியை தன்னுடன் வகுப்பறைக்கு அழைத்துவந்து மடியில் வைத்துக்கொண்டே பாடம் கவனித்துள்ளார். இதை ஒருவர் புகைப்படம் பிடித்த நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் கடந்த மாதம் வைரலாகியது. இது மணிப்பூர் அமைச்சர் தோங்காம் பிஸ்வஜித் சிங் கவனத்திற்கு சென்ற நிலையில், இந்த சிறுமியின் கற்கும் ஆர்வத்தை பாராட்டி அவரை இம்பாலில் உள்ள போர்டிங் பள்ளியில் அட்மிஷன் பெற்று தந்துள்ளார்.
மேலும், சிறுமியின் கல்விக்கான அனைத்து உதவியையும் அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'எனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இம்பாலில் உள்ள ஸ்லோப்லாந்து போர்டிங் பள்ளியில் சிறுமியின் சேர்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். இவர் எதிர்காலத்தில் சிறந்த விளங்க என்னுடன் சேர்ந்த நீங்களும் வாழ்த்துங்கள்' என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:
ஹைதராபாத்தில் ஆணவ படுகொலை - நீதி கேட்டு பாஜக போராட்டம்
இந்த வைரல் புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்த புகைப்படம் நமது குழந்தைகளின், குறிப்பாக பெண் குழந்தைகளின் உயர் நோக்கங்களை பிரதிபலிக்கிறது" என பாராட்டியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.