மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தலில் காலை 9 மணி வரை 11. 4 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 38 தொகுதிகளுக்கு கடந்த 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மீதமுள்ள 22 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
92 வேட்பாளர்கள் களத்தில் உள்ள சூழலில், 8,38,000 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக, 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Also read... உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்ளலாமா? கி.வீரமணி கேள்வி
இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி, தவுபல் பகுதியில் வாக்களிக்க வந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பின்பு, சிறிது நேரம் காத்திருந்து அவர் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election 2022, Manipur