முகப்பு /செய்தி /இந்தியா / மணிப்பூர் பாஜக தலைவர் திகேந்திர சிங் கொரோனா பாதிப்பால் மரணம்! பிரதமர் மோடி இரங்கல்..

மணிப்பூர் பாஜக தலைவர் திகேந்திர சிங் கொரோனா பாதிப்பால் மரணம்! பிரதமர் மோடி இரங்கல்..

திகேந்திர சிங்

திகேந்திர சிங்

நேற்று மாலை திகேந்திர சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் மணிப்பூர் மாநில பாஜக தலைவராக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாஜகவின் மணிப்பூர் மாநில தலைவர் திகேந்திர சிங் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததார். அவருக்கு வயது 69.

கொரோனா பெருந்தொற்றால் அன்றாடம் பலரும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிரபலங்களும் இரையாகி வருகின்றனர்.

இந்நிலையில் மணிப்பூர் மாநில பாஜக தலைவர் திகேந்திர சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. தலைநகர் இம்பாலில் உள்ள ஷிஜா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை திகேந்திர சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் மணிப்பூர் மாநில பாஜக தலைவராக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

திகேந்திர சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மணிப்பூர் பாஜக தலைவர் பேராசிரியர் திகேன் சிங் மறைவால் வேதனை அடைந்துள்ளேன். மணிப்பூரில் கட்சியை பலப்படுத்திய கடின உழைப்பாளியாக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவர் பல சமூக சேவை முயற்சிகளில் தீவிரமாக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் என் இரங்கல். ஓம் சாந்தி’ என கூறியுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ள இரங்கலில், திகேந்திர சிங் மிகவும் அர்ப்பணிப்பான ஒரு தலைவர், மணிப்பூரில் பாஜகவை வலுப்படுத்துவதில் உறுதியுடன் இருந்தார். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அவர் அயராது உழைத்தார். அவரது அகால மற்றும் துரதிர்ஷ்டவசமான மறைவால் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மணிப்பூர் மாநில பாஜக தலைவர் திகேந்திர சிங்-ஜியின் மறைவால் வேதனையடைந்தேன். மணிப்பூர் மாநிலத்தில் பாஜகவை வலுப்படுத்த அவர் உண்மையான முயற்சிகளை மேற்கொண்டார். துயரில் உள்ள குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி சாந்தி” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: BJP, Covid-19, COVID-19 Second Wave, Manipur