மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. 60 எம்.எம்.ஏக்கள் கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. பிப்ரவரி 28-ம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவும், மார்ச் 5-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெற்றது.
2002ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்தியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மணிப்பூர் மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியுமான ஒக்ராம் இபோபி சிங் தான், அரசுக்கு எதிரான பொது மக்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சஙகளையும் முறியடித்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை வெற்றிகரமாக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட, ஆட்சியை இழந்திருந்தாலும் அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்திருந்தது. ஆனால், பா.ஜ.க மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் படி பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கு
(நியூஸ்18- ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்) கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.