Home /News /national /

மணிப்பூர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் முந்தும் கட்சி எது?

மணிப்பூர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் முந்தும் கட்சி எது?

வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு

மணிப்பூரில் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

    பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 60 எம்.எம்.ஏக்கள் கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. பிப்ரவரி 28-ம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவும், மார்ச் 5-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெற்றது.

    2002ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்தியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மணிப்பூர் மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியுமான ஒக்ராம் இபோபி சிங் தான், அரசுக்கு எதிரான பொது மக்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சஙகளையும் முறியடித்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை வெற்றிகரமாக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர்.

    கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட, ஆட்சியை இழந்திருந்தாலும் அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்திருந்தது. எனினும் பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக இருந்த நிலையிலும் உள்ளூர் கட்சிகளின் உதவியுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமைத்து வெற்றிகரமாக 5 ஆண்டுகளையும் நிறைவுசெய்து அடுத்த தேர்தலுக்கு தயாராகி இருக்கிறது.

    இந்தமுறையும் பா.ஜ.க தனித்தே களமிறங்கியுள்ளது. காங்கிரஸும் தனித்து களமிறங்கியுள்ளது. இரண்டு கட்சிகளுக்குகிடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஐந்து மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகிவுள்ளது.

    டிசைன்பாக்ஸ்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் மணிப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்கிறது. அதன்படி, பா.ஜ.க 32 - 38 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 12 - 17 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 2 - 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    பி - மார்க்யூ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் மணிப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க 27 - 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 - 17 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 6 - 10 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ஜன் கி பாத் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் மணிப்பூரில் பா.ஜ.க அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க 23 - 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 - 14 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 8 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 12 - 18 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    சி.என்.எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி, பா.ஜ.க 26 - 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 - 17 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 6 - 10 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 7 - 12 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    போல்ஸ் ஆஃப் போல்ஸ் கருத்துக் கணிப்பின்படி பா.ஜ.க 29 - 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 - 16 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 6 - 8 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 7 -11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    கருத்துக்கணிப்பு முடிவுகளை  ShareChat-லும் தெரிந்துகொள்ளலாம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Election 2022, Manipur

    அடுத்த செய்தி