ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத்தில் 32 ஆண்டுகளாக பாஜக கோட்டையாக இருக்கும் தமிழர்கள் அதிகம் வாழும் மணிநகர் தொகுதி

குஜராத்தில் 32 ஆண்டுகளாக பாஜக கோட்டையாக இருக்கும் தமிழர்கள் அதிகம் வாழும் மணிநகர் தொகுதி

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

Maninagar Election Result 2022 | அஹமதாபாத்தில் ஒரு தமிழ்நாடு இருக்கிறது… அங்கு தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்…பிரதமர் மோடி புகழ்ந்த குஜராத்தின் மணிநகர் தொகுதி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநிலம் அஹமாபாத் மாவட்டத்தில் உள்ளது மணிநகர் தொகுதி. இந்த மணி நகரைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஆங்கில நாளிதழில் சிறப்புக் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்கள். மணி நகர் சாலைகளில் நடந்து சென்றால் மல்லிகைப் பூ வாசனையோடு, படடு சேலை கட்டிக்கொண்டு நடந்து செல்லும் பெண்களைப் பார்க்கும் போதும், அங்குள்ள சாலைகளில் இருக்கும் கோவில்களில் இருந்து ஒலிக்கும் கோவிந்த பாடல்களை கேட்கும் போதும், சாலையோரம் ஆவி பறக்க சட்டிகளில் இருந்து எடுக்கப்படும் இட்லிகளைப் பார்க்கும் போதும், சென்னையில் இருப்பதைப் போலவே இருக்கும் என்று.. அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும்.

ஆம், குஜராத்தில் இருக்கும் மினி சென்னை தான் மணிநகர். இப்போது எதற்கு மணி நகரைப் பற்றி புராணம் என்கறீர்களா?... தமிழர்கள் வாழும் இந்த மணி நகர் தொகுதியில் கடந்த 32 ஆண்டுகளாக பாஜகவைத் தவிர வேறு யாரும் ஜெயித்ததில்லையாம். அது போல் தான் இந்த தேர்தலிலும் மணி நகர் தொகுதியை பாஜக கைப்பற்ற உள்ளது.

1910-களில் இங்குள்ள நூற்பாலைகளில் வேலை செய்வதற்காக குடும்பம் குடும்பமாக சென்ற தமிழர்கள் தற்போது அங்கேயே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த தொகுதியில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் இதுவரை பாஜகவிற்குத் தான் வாக்களித்து வந்திருக்கிறார்களாம்.

ஆம் குஜராத்தின் முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி கூட, இதே தொகுதியில் இருந்து 2002, 2007 மற்றும் 2014 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வாகியிருக்கிறார். அந்த அளவிற்கு மணிநகர் பாஜகவின் கோட்டையாக உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் பணியாற்றி வருகின்றனர்.  குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் பேரிடர் மீட்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

' isDesktop="true" id="851990" youtubeid="aG0CbmTmWSY" category="national">

மேலும் குஜராத்தில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டு ஏராளமான சேதங்கள் ஏற்பட்டபோது மிகவும் துரிதமாக செயல்பட்டு அரசு மற்றும் குஜராத் மக்களின் பாராட்டுகளை பெற்றவர் திருப்புகழ். மேலும், தற்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை இயக்குநராக உள்ள கந்தசாமி ஐபிஎஸ்,  2010 கால கட்டத்தில் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு டிஜிபியாக இருந்து பல்வேறு வழக்குகளை மிகத்திறமையாக கையாண்டவர்.

Also see... காங்கிரஸ் வசமாகுமா இமாச்சல்?... முன்னேறும் காங்கிரஸ்.. பின்தங்கும் பாஜக!

இதனால் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை குஜராத் அரசு மிகுந்த மரியாதையோடு நடத்துவதோடு, அவர்களுக்கு முக்கியமான பொறுப்புகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இது குஜராத்தில் வாழும் தமிழர்களுக்கு உணர்வு ரீதியாக மகிழ்ச்சியை தருவதோடு, தமிழர்கள் மீது குஜராத் அரசு வைத்திருக்கும் கன்னியத்தையும் காட்டுகிறது. இதனால் தான்  தமிழர்கள் தொடர்ந்து பாஜகவை வெற்றிபெறச் செய்கிறார்கள் என்கிறார்கள்.

செய்தியாளர்: ரொசாரியோ ராய். எல்

First published:

Tags: BJP, Gujarat Assembly Election