முகப்பு /செய்தி /இந்தியா / திரிபுரா புதிய முதலமைச்சர் யார்..? பாஜகவில் நீடிக்கும் குழப்பம்.. அமித்ஷா அவசர ஆலோசனை..!

திரிபுரா புதிய முதலமைச்சர் யார்..? பாஜகவில் நீடிக்கும் குழப்பம்.. அமித்ஷா அவசர ஆலோசனை..!

மானிக் சாகா - பிரதிமா பவுமிக்

மானிக் சாகா - பிரதிமா பவுமிக்

திரிபுரா முதலமைச்சர் தேர்வில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக மேலிடத் தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tripura, India

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அங்கு முதலமைச்சராக மீண்டும் மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முன்னாள் முதலமைச்சர் பிப்லாப் தேப் ஆதரவாளர்கள் உள்ளிட்ட மற்றொரு பிரிவினர், இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் பிரதிமா பவுமிக்கை முதலமைச்சராக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க; கடும் போட்டிக்கு மத்தியில் திரிபுராவில் ஆட்சியை தக்க வைத்த பாஜக.. பிரதமருக்கு முதல்வர் புகழாரம்!

இதனால் மாணிக் சாகா அல்லது பிரதிமா பவுமிக் ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. திரிபுரா முதலமைச்சர் பதவியேற்பு விழா நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய முதலமைச்சர் தேர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கட்சி மேலிடம் கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு அனுப்பி வைத்தது.

அவர் திரிபுரா மாநில பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதுபோலவே உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதனால், புதிய முதலமைச்சர் யார் என்பது இன்று மாலைக்குள் முடிவு எட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: BJP, Tripura