கத்ரி பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
அந்த வழியாக வந்த பாஜகவை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் மனோகர் ஷெட்டி கழிவுநீர் அகற்றும் ஊழியர்களை அழைத்துள்ளார்.
ஆனால், மழைக்காலத்தில் பாதுகாப்பு கருதி சாக்கடைக்குள் இறங்க யாரும் முன்வராததால், மாநகராட்சியில் இருந்து அதிவிரைவு ஜெட் பம்பு மூலம் கழிவுநீரை உறிஞ்சும் வாகனத்தை வரவைத்துள்ளார். அந்த வாகனமும் பழுதடைந்துவிட்டதால், ஜெட் ஆப்ரேட்டர்களை தூய்மைபணி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அவர்களும் மறுத்துவிட்டதால் மனோகர் ஷெட்டி தாமாக முன்வந்து 8 அடி ஆழ சாக்கடைக்குள் இறங்கி டார்ச் லைட் உதவியுடன் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கழிவுகளை அப்புறப்படுத்தினார்.
அவருக்கு உதவியாக ஆதரவாளர்களும் களமிறங்கியதால் பாதாள சாக்கடை முழுமையாக சீரமைக்கபப்ட்டது. மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணியை மக்கள் பிரதிநிதி ஒருவரே களத்தில் இறங்கி பணியாற்றியதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka