ஹோம் /நியூஸ் /இந்தியா /

மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் குழு பொறுப்பேற்பு

மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் குழு பொறுப்பேற்பு

மங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளி

மங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளி

மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடித்த சம்பவத்துக்கு ஐ.ஆர்.சி எனப்படும் இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எனும் பயங்கரவாத அமைப்பு தற்போது பொறுப்பேற்றுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடித்த சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

  கர்நாடக மாநிலம் மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. ஆட்டோவில் பயணித்த ஷாரிக் என்ற நபரைப் பிடித்த போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த இந்த மங்களூரு சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Also Read : ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைய கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

  இந்நிலையில் மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடித்த சம்பவத்துக்கு ஐ.ஆர்.சி எனப்படும் இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எனும் பயங்கரவாத அமைப்பு தற்போது பொறுப்பேற்றுள்ளது. கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கத்ரி மஞ்சுநாத் கோவிலைத் தகர்க்க திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவ்வமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.

  இத்தகவலின் உண்மை நிலை பற்றியும் சம்பந்தப்பட்ட அமைப்பு பற்றியும் கர்நாடக மாநில போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Mangalore