ஹோம் /நியூஸ் /இந்தியா /

மங்களூரு குண்டுவெடிப்பு: லாட்ஜ் பக்கத்து ரூமில் ஸ்கூல் டீச்சர்.. நைசாக பேசி ஆதாரை வாங்கிய ஷாரிக்.. பரபரப்பு தகவல்கள்!

மங்களூரு குண்டுவெடிப்பு: லாட்ஜ் பக்கத்து ரூமில் ஸ்கூல் டீச்சர்.. நைசாக பேசி ஆதாரை வாங்கிய ஷாரிக்.. பரபரப்பு தகவல்கள்!

மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி

மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி

அல்-கொய்தா அமைப்பின் சித்தாந்தங்களால் முகமது ஷாரித் கவரப்பட்டு அதன் ஆதரவாளராக இருந்த நிலையில், கோவையில் விசாரணை தீவிரம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mangalore | Coimbatore

மங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவத்தினை நடத்திய முகமது ஷாரிக் கோவை தனியார் விடுதியில் கவுரி அருண்குமார் என்ற பெயரில் தங்கி இருந்ததும் , போலியான முகவரி கொடுத்து இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்கள் தங்கி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இந்த பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தங்கி இருந்த பகுதிகளில் யாருடன் சந்தித்து பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கோவையில் மூன்று நாட்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள MMV தங்கும் விடுதியில் முகமது ஷாரிக் தங்கி உள்ளார். அப்பொழுது தனது அடையாளத்தை மாற்றி கௌரி அருண்குமார் என்ற பெயரில் போலியான கர்நாடக மாநில முகவரி கொடுத்து அவர் தங்கி சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க | பிச்சைக்காரரை செருப்பால் அடித்த நகைக்கடைக்காரர்... பரபரப்பை ஏற்படுத்திய பகீர் வீடியோ!

மேலும் காந்திபுரத்தில் தங்கி இருந்த விடுதியில் பக்கத்து அறையில் தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரிடம் பழகி அவருடைய ஆதார் ஆவணத்தை வைத்து சிம் கார்டு வாங்கி இருப்பதும் ஆனால் அந்த சிம் கார்டில் இருந்து கோவை உட்பட எந்த பகுதிக்கும் பேசவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே இந்த சிம் கார்டு மூலம் வாட்ஸ் அப் கால் பயன்படுத்தி பிற நபர்களுடன் பேசி இருக்கலாம் என சந்தேகிக்கும் கோவை போலீசார், வாட்ஸ் அப் கால் விவரங்களை சேகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அல்-கொய்தா அமைப்பின் சித்தாந்தங்களால் முகமது ஷாரித் கவரப்பட்டு அதன் ஆதரவாளராக இருந்த நிலையில், கோவையில் இது போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் ஆதரவாளர்களாக இருக்கும் நபர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் இரு குண்டு வெடிப்பு சம்பங்களையும் வெளியில் இருந்து யாரேனும் வழி நடத்தி இருக்கின்றனரா என்பது குறித்தும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

Published by:Anupriyam K
First published:

Tags: Bomb blast, Coimbatore, Crime News, Terror Attack