Home /News /national /

தொலைந்து போன பொருட்களை பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திய மங்களூரு விமான நிலையம்

தொலைந்து போன பொருட்களை பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திய மங்களூரு விமான நிலையம்

தொலைந்த பொருட்கள் மீட்பு

தொலைந்த பொருட்கள் மீட்பு

பயணிகள் நேரில் வந்து அல்லது விட்டுச்சென்ற பொருட்களை தங்களின் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mangalore, India
இந்தியாவில் விமானப் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருவதால், விமான நிலைய முனையங்களும் பயணிகளின் உடமைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான பாதுகாப்பை மேம்படுத்த புதிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இந்த வகையில், மங்களூரு சர்வதேச விமான  நிலைய வளாகத்தில் உள்ள பயணிகளிடம் இருந்து தொலைந்து போன பொருட்களை பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் தொலைந்து போன மற்றும் கண்டுபிடிப்பு பிரிவு, தங்களுடைய உடைமைகளை விட்டுச் சென்ற பயணிகள் குறைந்தபட்ச சிரமத்துடன் அவற்றைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்று விமான நிலையத்திலிருந்து வெளியான ஒரு செய்தியில், "டெர்மினல் மேலாளர் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு வலுவான பொறிமுறையானது தங்கள் பொருட்களை விட்டுச்செல்லும் பயணிகளின் பொருட்களை பாதுகாத்து மீட்டுத்தரும் என்று உறுதியளிக்கிறது"

வெளிநாடுகளை போல் சென்னை விமான நிலையத்திலும் பயணிகள் ஓய்வு எடுக்க ‘குட்டி அறைகள்’

பொதுவாக உள்நாட்டு அல்லது சர்வதேச விமான நிலையங்களில் உள்ள விமானத்திற்கு முந்தைய பாதுகாப்பு ஸ்கிரீனிங் செயல்முறைக்கு பொருட்களை டெபாசிட் செய்யும் போது ஆதார், வாக்காளர் அடையாளம், டெபிட், கிரெடிட் மற்றும் பான் கார்டுகள் ஆகியவற்றை பாதுகாப்பு ஹோல்ட் பகுதியில் உள்ள தட்டுகளில் வைத்துவிட்டு மக்கள் மறந்துவிடுகின்றனர். பயணிகள் நேரில் வந்து அல்லது விட்டுச்சென்ற பொருட்களை தங்களின் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

உரிமை கோருவதற்கு யாரும் இல்லாத பொருட்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) விமான நிலையப் பாதுகாப்புக் குழு, விமான நிலைய பராமரிப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களால் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்புக்காக முனைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.

பொருளைத் தவற விட்ட நபர், அலுவலக நேரத்தில் டெர்மினல் மேலாளரின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, பயண ஆவணங்கள் மற்றும் இழந்த பொருளின் உரிமைச் சான்றிதழைச் சமர்ப்பித்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Airport, Mangalore

அடுத்த செய்தி