Home /News /national /

அதிகரிக்கும் கொரோனா: மாஸ்க் கட்டாயம்... அதிரடி நடவடிக்கையை தொடங்கியது உ.பி அரசு

அதிகரிக்கும் கொரோனா: மாஸ்க் கட்டாயம்... அதிரடி நடவடிக்கையை தொடங்கியது உ.பி அரசு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது.

கவுதம புத்த நகர், காஜியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்சாகர், பாக்பாத், லக்னோ ஆகிய மாவட்டங்களில் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் அருகேயுள்ள 6 மாவட்டங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த 2 நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் கடந்த 4 நாட்களாக பரவல் சீராக அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா பரவலின் 4 வது அலை ஏற்பட்டு விட்டதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பாதிப்பு இறங்கு முகமாக இருந்த நிலையில், தற்போது எதற்காக அதிகரிக்கிறது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து என்ன மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியை சுற்றியுள்ள உத்தரப்பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா - ஒரே வாரத்தில் 44 பேர் பாதிப்பு

இதன்படி, கவுதம புத்த நகர், காஜியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்சாகர், பாக்பாத், லக்னோ ஆகிய மாவட்டங்களில் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

முன்னதாக கொரோனா பாதிப்புகள் குறைந்ததால் மாஸ்க் அணிதல் அவசியமில்லை என்பது உள்பட பல தளர்வுகளை உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருந்தது.

இதையும் படிங்க - தொடரும் ஒலிப்பெருக்கி சர்ச்சை: ஸ்பீக்கரில் மக்கள் பிரச்னைகளை ஒலிபரப்பி கவனம் ஈர்த்த சமாஜ்வாடி உறுப்பினர்

இந்தியாவின் சில நகரங்களில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஜூன் மாத காலத்தில் நான்காம் அலை பாதிப்பு ஏற்படும் என ஐஐடி ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. நான்காம் அலை குறித்த பேச்சு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக வேலூர் சிஎம்சி கல்லூரி பேராசிரியரும் நாட்டின் முன்னணி மைக்ரோ பயாலஜிஸ்டுமான டாக்டர் ககன்தீப் கங்க் நான்காம் அலை குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது "இந்தியாவில் நான்காம் அலை ஏற்படும் என்ற கூற்று தற்போதைய சூழலில் மிகையான ஒன்று. அதேவேளை, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

உருமாறிய வைரஸ் பரவல் என்பது இயல்பான ஒன்று தான். வெளிநாடுகளுக்கு மக்கள் சென்று வரும் சூழலில் இதை தவிர்க்க முடியாது. அதேவேளை, XE வகை கொரோனாவைக் கண்டு அச்சப்பட வேண்டியது இல்லை. BA.1, BA.2 போன்ற ரகங்களைப் போல XE தொற்று அதிக தீவிரத்தன்மை கொண்ட தொற்று அல்ல. அனைத்து பாதிப்புக்களும் XE வகை எனவும் அச்சம் கொள்ள தேவையில்லை" என்றார்.
Published by:Musthak
First published:

Tags: Corona

அடுத்த செய்தி