Home /News /national /

கட்டாய 6 ஏர்பேக் விதி ஏழைகளுக்கு எதிரானது: நிதின் கட்கரிக்கு ஐ.ஆர்.எஃப் அமைப்பு கடிதம்

கட்டாய 6 ஏர்பேக் விதி ஏழைகளுக்கு எதிரானது: நிதின் கட்கரிக்கு ஐ.ஆர்.எஃப் அமைப்பு கடிதம்

கட்டாய 6 ஏர்பேக் விதி

கட்டாய 6 ஏர்பேக் விதி

அந்த கடிதத்தில் கட்டாய 6 ஏர்பேக் விதி (mandatory 6 airbag rule) பணக்காரர்களுக்கு ஆதரவான மற்றும் ஏழைகளுக்கு எதிரான கொள்கை என்று குறிப்பிட்டு இருக்கிறது.

கட்டாய ஏர்பேக் விதி (mandatory airbag rule) செயல்படுத்தப்பட கூடாது என்று சர்வதேச சாலை கூட்டமைப்பு (International Road Federation) மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 2019 முதல் அனைத்து புதிய கார்களிலும் டிரைவர் சைட் ஏர்பேக்ஸ் கட்டாயமாக்கப்பட்டன. அதே நேரத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கோ பேசேஞ்சர் ஏர்பேக் (co-passenger airbag) கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் தான் சர்வதேச சாலை கூட்டமைப்பானது, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டாய 6 ஏர்பேக் விதி குறித்து கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் கட்டாய 6 ஏர்பேக் விதி (mandatory 6 airbag rule) பணக்காரர்களுக்கு ஆதரவான மற்றும் ஏழைகளுக்கு எதிரான கொள்கை என்று குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் இந்த கட்டாய விதி சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதியை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த கட்டாய விதியை செயல்படுத்த கூடாது என்று கூறி இருக்கிறது IRF. கார்களின் குறைந்தபட்ச ஸ்பெசிஃபிகேஷன்களை மிக கடுமையாக்குவதன் மூலம், என்ட்ரி லெவல் வாகனங்களின் விலைகள் உயர கூடும். இது தங்கள் வாகனத்தை டூ வீலரிலிருந்து ஃபோர் வீலராக்க நினைக்கும் மக்களுக்கான வாய்ப்புகள் மேலும் கடுமையாகும்.

ஒரு சில பணக்காரர்கள் பாதுகாப்பாக இருக்க இலக்கு வைக்கப்பட்டாலும் அப்பர் மிடில் கிளாஸை சேர்ந்த இன்னும் பலருக்கு பாதுகாப்பான இயக்க விருப்பம் (safe mobility option) கட்டாய விதியால் மறுக்கப்படும். இந்த கோணத்தில் பார்த்தால் இது பணக்காரர்களுக்கு ஆதரவான மற்றும் ஏழைகளுக்கு எதிரான கொள்கையாக இருக்கும்” என்று IRF தலைவர் (Emeritus) கே கே கபிலா மத்திய அமைச்சர் கட்கரிக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள் : காரின் உட்பகுதி டாய்லெட் சீட்டை விட அசுத்தமானது - ஷாக்கிங் ரிப்போர்ட்!

வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான மக்கள் பொழுது போக்கிற்காக இரு சக்கர வாகனங்களை ஓட்டும் நிலையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் மக்கள் கார் வாங்க முடியாததால் டூ வீலர்களை வாங்கி அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். காரை விட இரு சக்கர வாகனம் மிகவும் பாதுகாப்பற்றது என்பதால் அதிகபட்ச சாலை விபத்துக்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்குகிறார்கள். இந்த சூழலில் நாட்டின் சாலை பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வரும் கட்கரி நாட்டில் காரில் முன்பக்க ஏர்பேக்ஸ்களை கட்டாயமாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.8 பேர் வரை செல்லும் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவதற்கான வரைவு ஜிஎஸ்ஆர் (General Statutory Rules) அறிவிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் கட்கரி. மோட்டார் வாகனங்களை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானதாக மாற்ற இது ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. கட்டாய 6 ஏர்பேக் விதிக்கான காலக்கெடு எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது இந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்திற்குள் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டாய விதி உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் இந்தியாவில் சிறிய என்ட்ரி லெவல் சிறிய காரின் விலையில் 10% வரை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஒரே சார்ஜில் 4,000 கி.மீ. பயணம் - உலக சாதனை படைத்த கிராவ்டன் குவாண்டா எலெக்ட்ரிக் பைக் நிறுவனம்!

இந்த நிலையில் தான் கே கே கபிலா, கட்காரிக்கு எழுதி உள்ள கடிதத்தில், எந்த ஆடம்பரமும் இல்லாத என்ட்ரி லெவல் கார்களை வாங்க மக்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவற்றை வாங்க முடியாததாக மாற்ற கூடாது. பெரிய சிட்டிகள் மற்றும் பெருநகரங்களில் கூட பின் இருக்கைகளில் சீட் பெல்ட்களை இணைக்கும் நடைமுறை மிகவும் குறைவாக உள்ளது. இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், சீட் பெல்ட் இல்லாமல் ஏர்பேக் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் அல்லது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்ற விழிப்புணர்வும் இந்தியாவில் மிகக் குறைவு என்று கூறி இருக்கிறார்.

இந்த விஷயத்தை ஏர்பேக் உற்பத்தியாளர்கள் மக்களுக்கு ஒருபோதும் சொல்ல மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு காசு தான் குறியே தவிர பாதுகாப்பில் ஆர்வம் இல்லை என்றும் காட்டமாக தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் உள்ள எந்த நாட்டிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் இல்லை. உலகில் எங்கும் ஏர்பேக்குகள் மூலம் பாதுகாப்பு கட்டாயப்படுத்தப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Airbags, Nitin Gadkari

அடுத்த செய்தி