• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சுற்றுலாவாசிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு வழங்கி அசத்தும் உத்திரபிரதேச காவல்துறை!

சுற்றுலாவாசிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு வழங்கி அசத்தும் உத்திரபிரதேச காவல்துறை!

சுற்றுலாவாசிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு வழங்கி அசத்தும் உத்திரபிரதேச காவல்துறை!

சுற்றுலாவாசிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு வழங்கி அசத்தும் உத்திரபிரதேச காவல்துறை!

நெரிசல் நிறைந்த சுற்றுலாத்தலங்களின் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதிலே, பலரும் சமூக விலகல் மற்றும் பிற கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமால் இருப்பதைக் கண்டோம்.

  • Share this:
சுற்றுலா வாசிகளுக்கு, உத்திரப்பிரதேச காவல்துறையினர் புதுமையான முறையில் கோவிட்-19 பாதுகாப்பு குறித்து முக்கியமான செய்தியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். மாஸ்க் அணிய வேண்டும் என்பதை நினைவுப்படுத்தும் விதமாக அவர்கள் அறிவிப்பு அமைந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்ட பின்னர் கோவிட்-19 தொற்றுநோய் கட்டுக்குள் இருப்பதாகத் தோன்றியது. ஊரடங்கு மற்றும் வெளியே செல்வதற்கான கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் தளர்த்தப்பட்டன. தொற்றுநோய் பாதிப்பால், வீடுகளில் முடங்கியிருந்த மக்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வெளியே செல்வதற்கான வாய்ப்பாக இது அமைந்தது. எவ்வாறாயினும், கொரோனா வைரஸின் மூன்றாவது அலையினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி செய்திகள் வந்தவுடன், சுற்றுலா செல்வதற்கான ஆர்வத்தில் கொஞ்சம் பயமும் எச்சரிக்கை உணர்வும் தோன்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெரிசல் நிறைந்த சுற்றுலாத்தலங்களின் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதிலே, பலரும் சமூக விலகல் மற்றும் பிற கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமால் இருப்பதைக் கண்டோம்.

ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கி இருந்தவர்களுக்கு, விடுமுறையை முழுதாக அனுபவிப்பதும் முக்கியம் என்றாலும், அது உயிருக்கு ஆபத்தான நிலையில் முடியக்கூடாது. எனவே, கோவிட்-19 பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க, முகக்கவசம் அணிய வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டுவதற்காக புதுமையான ஒரு இடுகையை உத்தரபிரதேச காவல்துறை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது.

உ.பி. காவல்துறை டிவிட்டரில் பகிர்ந்துள்ள படத்தில் மணாலி, ஆக்ரா, சிம்லா மற்றும் குலு ஆகிய நான்கு சுற்றுலாத்தலங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது (ஆங்கில சொற்களில்). விடுமுறையை அனுபவிக்கும் போது முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நுட்பமான செய்தியை இந்த டிவீட் வெளிப்படுத்துகிறது. “நீங்கள் சுற்றுலாத்தலங்களில் குதூகலமாக இருக்கும் போது, உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு பயணத் துணை, முகக்கவசம்! நீங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக செலவிடும் நேரத்தில் முகக்கவசத்தை அணிந்தபடி இருங்கள்!“ என்ற கேப்ஷனுடன் ட்விட்டரில் படம் பகிரப்பட்டது.

காவல் துறையின் சமூக ஊடக குழுவைப் பாராட்டி, நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். "காவல் துறையின் நல்ல முயற்சி" என்று உ.பி. காவல்துறையின் இந்த செய்திக்கு ஒரு யூசர் பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்.

அற்புதமான விடுமுறையை அனுபவிக்க மாஸ்க் பயன்படுத்தி, பாதுகாப்பாக வீடு திரும்பவும் என்று மற்றொரு யூசர் #maskupIndia ஹேஷ்டேக்கில் பதிவு செய்துள்ளார்.

கோவிட்-19 தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காவல்துறை, புதுமையான சமூக ஊடக இடுகைகளைப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ கோலா பாட்டில்களை தவிர்த்த, வைரலான அந்த புகைப்படத்தை, கோவிட் -19 தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்களை ஊக்குவிப்பதற்காக உ.பி போலீசார் பயன்படுத்தினார்கள். காவல்துறை கோகோ கோலாவின் எழுத்தைப் பயன்படுத்தி வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டது. அதை 'கோ-வாக்ஸின்-கோ-விஷீல்ட்'- கோவிட் -19 தடுப்பூசிகளின் பெயர்களில் சேர்த்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: