6 அடி உயரத்தில் டிரம்ப்-க்கு சிலை வைத்து தினமும் பூஜை செய்யும் இந்திய இளைஞர்!

டிரம்ப்பை எனக்கு பிடிக்கும். அதனால்தான் அவருக்கு சிலை வைத்துள்ளேன் என்று தெலங்கானா இளைஞர் கிருஷ்ணா கூறினார்.

Web Desk | news18
Updated: June 20, 2019, 7:47 AM IST
6 அடி உயரத்தில் டிரம்ப்-க்கு சிலை வைத்து தினமும் பூஜை செய்யும் இந்திய இளைஞர்!
டொனால்ட் டிரம்ப்க்கு, சிலை
Web Desk | news18
Updated: June 20, 2019, 7:47 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு, 6 அடி உயரமுள்ள சிலையை தனது வீட்டின் முன்பு வைத்து தெலங்கானா இளைஞர் ஒருவர் பூஜை செய்து வருகிறார்.

தெலங்கானா மாநிலம் ஜனகாம்மா மாவட்டத்தை சேர்ந்த பூஸ்சா கிருஷ்ணா என்னும் இளைஞர் தனது வீட்டின் முன்பு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சிலை வைத்துள்ளார். 6 அடி உயரம் கொண்ட டிரம்ப் சிலைக்கு நாள்தோறும் இந்த  இளைஞர் பூஜை செய்து வருகிறார்.
கடந்த 14-ம் தேதி டிரம்ப் பிறந்த நாளையொட்டி, பால் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதனிடையே இந்தியாவில் பல்வேறு தேசிய தலைவர்களுக்கு சிலைகள் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிலைக்கு இளைஞர் கிருஷ்ணா தினந்தோறும் பூஜை செய்து வருவது எதற்காக என்று தெரியாமல் அப்பகுதியில் உள்ள மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து பேசிய கிருஷ்ணா, "டிரம்ப்பை எனக்கு பிடிக்கும். அதனால்தான் அவருக்கு சிலை வைத்துள்ளேன். அவருக்கு தினமும் பூஜைகளும் செய்வேன்" என கூறியுள்ளார்.

Also see... ராயல்ட்டி பிரச்னையில் சச்சின் டெண்டுல்கர்... பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...