முகப்பு /செய்தி /இந்தியா / டயாலிசிஸ் செய்ய பணமில்லை... மருத்துவ உதவி பெற சிறைக்கு செல்ல துணிந்த இளைஞர்!

டயாலிசிஸ் செய்ய பணமில்லை... மருத்துவ உதவி பெற சிறைக்கு செல்ல துணிந்த இளைஞர்!

புனே சிறைச்சாலை

புனே சிறைச்சாலை

அமித்திற்கு 2 கிட்னியும் செயலிழந்துவிட்டதால் வாரம் 4 முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் எனவும் அதற்கு பணம் இல்லாததால், இவ்வாறு செய்ததாகவும் ஒப்புகொண்டார்.

  • Last Updated :
  • Pune, India

சிறைக்கு சென்றால் நேரத்திற்கு உணவும் மருத்துவ உதவியும் கிடைக்கும் என்பதால் 35 வயது இளைஞர் ஒருவர் திட்டமிட்டு குற்றம் செய்து போலீஸில் பிடிபட்டுள்ளார். புனேவை சேர்ந்த அமித் ஜகன்நாத் என்பவருக்கு கல்லீரல் செயலிழந்தது கண்டறியப்பட்டது, மேலும் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

யேரவாடா சிறையில் பணியாற்றும் பெண் காவலர் இடமாற்றம் செய்யப்படுவுள்ள நிலையில், அவரை தொடர்பு கொண்ட அமித், தான் ஏடிஜி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிவதாகவும், தான் நினைத்தால் அதிகாரிகளுடன் பேசி, இடமாற்றம் செய்யப்படுவதை தடுக்க முடியும் என கூறி ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் காவலரும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.

Also Read : வெள்ளை நிற வேட்டி சட்டையில் அம்பேத்கர் - சர்ச்சையை கிளப்பிய அட்டைப்படம்!

அதன் பின்னர், அந்த காவலர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்த நிலையில், விசாரணை நடத்தப்பட்டு அமித் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அமித்திற்கு 2 கிட்னியும் செயலிழந்துவிட்டதால் வாரம் 4 முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் எனவும் அதற்கு பணம் இல்லாததால், இவ்வாறு செய்ததாகவும் ஒப்புகொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Pune prison