லாக் அப்பில் நிர்வாணம்: பெண் போலீசை ஈவ் டீசிங் செய்த கைதி!

Prison - representational image

சுரேஷ் திடீரென தனது ஆடைகளை களைந்துவிட்டு தன்னை நிர்வாணமாக்கியிருக்கிறார். மேலும் காவல்நிலையத்தில் இருந்த பெண் போலீசாரை பார்த்து ஆபாசமாக பேசியுள்ளார்.

  • Share this:
லாக் அப்பில் அடைத்து வைத்த நபர் திடீரென ஆடைகளை களைத்துவிட்டு, அங்கிருந்த பெண் போலீசை ஆபாசமாக பேசியதை பார்த்து சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபரை கைது செய்து காவல் நிலைய லாக் அப்பில் அடைத்து வைத்த நிலையில் அந்த நபர் திடீரென லாக் அப்பில் அடாவடியாக நடந்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள தலோதரா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் நந்த்வானி, இவருக்கு வயது 55. சுரேஷ் கடந்த வெள்ளியன்று (செப் 9) பொது இடத்தில் அடாவடி செயல்களில் ஈடுபட்டதாக காவல்நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள் அவரை, தடுத்து நிறுத்த முற்பட்ட போது அந்த நபர் போலீசாரையும் தாக்க முற்பட்டார்.

இதனால் கடுப்பான போலீசார் அவரை கைது செய்து சலபத்புரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை லாக் அப்பில் அடைத்து வைத்தனர்.

Also Read:  769 நாள் லீவு போட்டுவிட்டு ஒரே நேரத்தில் இரட்டை சம்பளம் வாங்கிய கில்லாடி கணக்கு வாத்தியார் – ஏமாற்றியது எப்படி?

லாக் அப்பில் அந்த நபர் தொடர்ந்து கத்திக்கொண்டு இருந்ததால் அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர் சுரேஷை அமைதியாக இருக்குமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து சுரேஷ் திடீரென தனது ஆடைகளை களைந்துவிட்டு தன்னை நிர்வாணமாக்கியிருக்கிறார். மேலும் காவல்நிலையத்தில் இருந்த பெண் போலீசாரை பார்த்து ஆபாசமாக பேசியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சுரேஷிடம் ஆடைகளை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவற்றை கண்டுகொள்ளாத சுரேஷ், தனது செயலை தொடர்ந்து கொண்டிருந்தார்.

Also Read:  லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக பள்ளியில் மாணவிகளை அடித்து அவமதித்த ஆசிரியை!

இப்படியே தொடர விட்டால் வேலைக்கு ஆகாது என கருதிய சக போலீசாரும், காவல் ஆய்வாளர் எம்.வி.கிகானியும் லாக் அப்பிற்குள் நுழைந்து அந்த நபரை கட்டாயப்படுத்தி உடைகளை போட்டுக்கொள்ளச் செய்தனர்.

பின்னர் பெண் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக சுரேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போல உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், ஆபாசமாக பேசிய நபர் அவரை இரும்பு கம்பியால் அடித்தார். அவரை கைது செய்த காவல்துறையினர், அந்த நபர் மீது ஈவ் டீசிங், கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உல்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 
Published by:Arun
First published: