ஓடிசா மாநிலத்தில் ஒரு நபருக்கு செருப்பு மாலை அணிவித்து லாரி முன் கட்டி ஓட்டிச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலம் கேந்திரபாடா மாவட்டத்தின் திகர்பங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரா ஸ்வான். இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நபர் பாரதீப் துறைமுகம் அருகே உள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி டிரைவர்களிடம் வேலை வேண்டும் என உதவி கேட்டுள்ளார். அவர்கள் பார்க்கலாம் என கூறிவிட்டு அருகே வேறு வேலைக்கு சென்ற போது இந்த நபர் அவர்களின் செல்போனை திருடியதாகக் கூறப்படுகிறது.
செல்போன் திருடியதை அந்த இரு லாரி டிரைவர்களுக்கும் தெரியவே, அந்நபரை கையும் களவுமாக பிடித்துள்ளார். தொடர்ந்து அவர்கள் கஜேந்திராவை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். அத்துடன் அந்நபருக்கு செருப்பு மாலை அணிவித்து, அவரை லாரியின் முன்பகுதியில் கட்டிவைத்து, மூன்று கிமீ தூரத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தியுள்ளனர். இதை அப்பகுதியில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
இதையும் படிங்க:
ஒற்றை காலில் நொண்டி அடித்தே பள்ளிக்கு செல்லும் 10வயது சிறுமி.. ஆசிரியை ஆவதே கனவு - உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், ஒடிசா மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட ஒரு லாரி டிரைவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஜகத்சிங்பூர் காவல் கண்காணிப்பாருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.