• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஓடும் ரயிலில் சிக்கிய பயணி; நொடிப் பொழுதில் மீட்ட காவலர் - உறைய வைக்கும் காட்சி!!

ஓடும் ரயிலில் சிக்கிய பயணி; நொடிப் பொழுதில் மீட்ட காவலர் - உறைய வைக்கும் காட்சி!!

ஓடும் ரயிலில் சிக்கிய பயணி; நொடிப் பொழுதில் மீட்ட காவலர் - உறைய வைக்கும் காட்சி!!

ஓடும் ரயிலில் சிக்கிய பயணி; நொடிப் பொழுதில் மீட்ட காவலர் - உறைய வைக்கும் காட்சி!!

ரயில்வே காவலர் நொடிப் பொழுதில் ஓடிச்சென்று பயணியை காப்பாத்த முயற்சிக்கிறார். அப்போது, சகப் பயணி ஒருவரும் சிக்கியவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கீழே விழுகின்றனர்.

  • Share this:
    ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட பயணி ஒருவர் தடுமாறி ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கிய நிலையில், நொடிப் பொழுதில் அங்கிருந்த ரயில்வே காவலர் அவரை மீட்டுள்ளது அனைவரையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுதொடர்பாகஇந்திய ரயில்வே காவலர் படை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று புறப்படுகிறது. அப்போது, இரண்டு கைகளிலும் பெட்டி, பைகளுடன் வரும் பயணி ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்கிறார்.

    முதலில் ஒரு கையில் இருந்த பெட்டியை ரயிலுக்குள் வைத்த அவர், பின்னர் இன்னொரு பெட்டியையும் வைத்துவிட்டு ரயிலுக்குள் ஏற முயற்சிக்கிறார். இதில், நிலைதடுமாறிய அவர், ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கிக் கொள்கிறார்.

    Also read: இனி அரசு ஊழியர்கள் கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது... செக் வைத்த அரசு!!

    தொடர்ந்து, ரயில்பெட்டியின் கைப்பிடியை பிடித்ததால், அவர் ரயிலுக்கு அடியில் விழாமல் இருக்கிறார். எனினும், அவரால் அதிலிருந்து விடுப்பட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறார். இதனிடையே, பயணியின் பின்னால் வந்த ரயில்வே காவலர் நொடிப் பொழுதில் ஓடிச்சென்று பயணியை காப்பாத்த முயற்சிக்கிறார்.



    அப்போது, சகப் பயணி ஒருவரும் சிக்கியவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கீழே விழுகின்றனர். தொடர்ந்து, துரிதமாக செயல்பட்ட காவலர் தான் கீழே விழுந்ததையும் பொருட்படுத்தாமல் வேகமாக எழுந்து சென்று ரயிலில் சிக்கிய பயணியை துரிதமாக வெளியே இழுத்து மீட்கிறார்.

    பின்னர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் பலர் ஓடி வந்து, அவருக்கு உதவி செய்கின்றனர். இந்த துரித நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர் ராஜ்வீர் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வீடியோவை #HeroesInUniform என்ற ஹேஷ்டேக்குடன் ரயில்வே காவல்படை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: