முகப்பு /செய்தி /இந்தியா / மனைவியையும் மாமியாரையும் கொன்று தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

மனைவியையும் மாமியாரையும் கொன்று தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

பெங்களூருவில் மனைவியைக் கொன்றுவிட்டு கொல்கத்தா சென்ற நபர், மாமியாரையும் சுட்டுக்கொன்று தற்கொலை செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது அமித் அகர்வால், தனது மனைவி ஷில்பியுடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார். குடும்பத் தகராறில் ஷில்பியைக் கொன்ற அமித், விமானத்தில் கொல்கத்தா சென்று, மாமியார் லலிதா தன்தானியாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அத்துடன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து மேற்குவங்கம் மற்றும் கர்நாடக போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை கடிதத்தில் மனைவியைக் கொன்றுவிட்டதாக அமித் எழுதியதை, போலீசார் பார்த்த பிறகே பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் ஷில்பி இறந்தது தெரியவந்தது.

Also see:

அமித்தின் 10 வயது மகன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Bengaluru, Crime | குற்றச் செய்திகள், Kolkatta