திருமணத்துக்கு சம்மதிக்காததால் 17 வயது பெண்ணை எரித்துக் கொன்ற இளைஞர்!

திருமணத்துக்கு சம்மதிக்காததால் 17 வயது பெண்ணை எரித்துக் கொன்ற இளைஞர்!
சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் போலீசார்
  • News18
  • Last Updated: October 10, 2019, 10:25 AM IST
  • Share this:
திருமணத்துக்கு சம்மதிக்காததால் கேரளாவில் 17 வயது பெண்ணை 24 வயது இளைஞர் எரித்துகொன்றுள்ளார். இதில், அந்த இளைஞரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

கேரளாவின் கொச்சி பகுதியில் வசிக்கும் 17 வயது பெண், தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது உறவினர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மிதுன் என்பவரிடம் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து, தன்னை திருமணம் செய்யும்படி மிதுன் அந்த பெண்ணிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், தான் படிக்க வேண்டும் என்று அந்தப் பெண் மறுத்துள்ளார். தொடர்ந்து மிதுன் அந்தப் பெண்ணுக்கு திருமண தொல்லை தரவே கடந்த 7-ம் தேதி போலீசில் பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் மிதுனையும் அவரது பெற்றோர்களையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தான் அந்தப் பெண்ணை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று மிதுன் போலீசாரிடம் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு டியூசனில் இருந்து அந்தப் பெண் வீட்டுக்கு திரும்பிய போது, வழி மறித்துள்ள மிதுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அந்தப் பெண் வீட்டுக்கு திரும்பியதும் அங்கு மிதுன் வரவே, பெண்ணின் தந்தை தடுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வெளியே வந்த பெண், தனது தந்தையை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், தான் வாட்டர் கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அந்தப் பெண் மீது ஊற்றி தீ வைத்தார் மிதுன். அப்போது, மிதுன் மீதும் பெட்ரோல் பட்டதால் அவர் மீதும் தீப்பற்றியது. தனது மகளை காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் தீக்காயம் ஏற்பட்டது.பெண் மற்றும் மிதும் சம்பவ இடத்திலேயே பலத்த தீக்காயத்துடன் மரணமடைந்தனர். தந்தை சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also See...

First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading